காரைதீவு நிருபர் சகா-
1038 ஆசிரியர்கள் நியமனத்தில் வெறும் 103 பேரே தமிழ் மொழி மூலம் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இத மனவருத்தத்திற்குறிய விடயம் ஒன்றாகும். இதனை அதிகரிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக ஏற்படுத்துமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். பட்டதாரி பயிலுனர்கள் மற்றும் தொழில்நுட்ப பாடவிதானத்தின் கீழ் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா தாரர்களுக்கான ஆசிரியர் நியமனம் 1038 பேருக்கு மஹாரகமவில் அமைந்துள்ள கல்வியல் கல்லூரி கேட்போர் கூட மண்டபத்தில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் தலைமையில் இணைந்து வழங்கி வைத்தனர்.
இதில் 103 தமிழ் மொழி மூலமும் 935 பேர் சிங்கள மொழி மூலமாகவும்; நியமனங்களை பெற்றுக் கொண்டனர். பாடசாலை அடிப்படையில் இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்ப ட்டதாரி பயிலுனர்கள் டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் நியமனத்திற்கு உள்வாங்குகின்ற பொழுது மிகவும் குறைவானவர்களே தமிழ் மொழி மூலம் உள்வாங்கப்படுகின்றார்கள்.
இதனை அதிகரிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். தமிழ் மொழிமூலம் ஆசிரியர்கள் நியமனத்தின் போது கல்வித்தகைமையில் ஒரு சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அப்படி செய்தால் மாத்திரமே எமது தமிழ் மொழி மூலமாக ஆசிரியர்களை நியமிக்க முடியும். அதற்கான ஒரு விசேட வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சின் அதிகாரிகள் எதிர்காலத்தில் ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தால் மாத்திரமே ஆசிரியர் பற்றாகுறையை நிவர்த்தி செய்ய முடியும். அதன் மூலம் எமது பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றக்குறையை நிவர்த்தி செய்து மாணவர்களுக்கான ஒரு சிறந்த கல்வியை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.