இனவாதிகளின் பசிக்கு நாம் இறையாகிவிடகூடாது- இம்ரான் MP

னவாதிகளின் பசிக்கு நாம் இறையாகிவிடகூடாது என தெரிவித்தார் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தோப்பூர் உப்பூறல் பகுதியில் தமிழ் முஸ்லிம் இளைஞர்களுக்கிடையில் இடம்பெற்ற பிரட்சினை தொடர்பாக இருதரப்பினரையும் சந்தித்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட காணிப்பிரட்சனை காரணமாக தமிழ் முஸ்லிம் இளைஞர்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பை தொடர்ந்து சிலர் இப்பிரட்சினைக்கு இனவாத சாயம் பூசி இரு சமூகங்களுக்கிடையில் பதற்ற நிலையை ஏற்படுத்த எடுத்த முயற்சி பாராளுமன்ற உறுப்பினரின் தலையீட்டை தொடர்ந்து சுமூக நிலைக்கு கொண்டுவரப்பட்டது அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்.

சிறுபான்மை சமூகங்களின் முக்கிய பிரட்சனையாக காணிப்பிரட்சனையே வடக்கு கிழக்கு முழுவதும் காணப்படுகிறது இதற்கான தீர்வுகளை தேடியே மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் உள்ளூராட்சி சபை முதல் பாராளுமன்றம் வரை போராடிவருகிறோம் இப்பிரட்சினைகளுக்கு சுமூக தீர்வு கிடைக்க வேண்டுமாயின் எமது இரு சமூகங்களும் ஒற்றுமையாக நின்று போராட வேண்டும் இவ்வாறு எமக்குள்ளே ஏற்படும் முரண்பாடுகள் இனவாதிகளுக்கே சாதகமாகும் அவர்களின் பசிக்கு நாம் இறையாகிவிடகூடாது அவ்வாறு ஒரு நிலைமை ஏற்படின் எமது அடிப்படை உரிமைகளை கூட எம்மால் பெற்றுக்கொள்ள முடியாது.

நேற்று இப்பிரதேசத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுகான தீர்வு வன்முறையில் கிடைக்காது அதை நீங்களே இப்போது உணர்வீர்கள் இதனால் ஒருபகுதியினர் வைத்தியசாலைக்கும் மறுபகுதியினர் பொலிஸ் நிலையத்துகுமே செல்லவேண்டும் பலவருடகாலமாக திருகோணமலையில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம் இவ்வொற்றுமையை சீர்குலைக்க நாம் காரணமாக இருக்க கூடாது நாட்டில் நாம் சிறுபான்மை என்றாலும் கிழக்குமாகாணத்தில் நாமே பெரும்பான்மை ஆகவே நாம் கருத்துவேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக இருந்து எமது உரிமைகளை வென்றடுப்போம் என்றார்.
ஊடகப்பிரிவு.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -