(Talent) நிகழ்வுக்கு விண்ணப்பம் கோரல்..!

எம்.எஸ்.எம்.சாஹிர்-
தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன இனணந்து நடாத்தும் தேசிய வேலைத்திட்டம் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி டபிள்யு.ஜீ.எஸ்.எரந்திகவின் தலைமையில், யூத் கொட் டலன்ட் (Youth got talent) என்ற செயத்திட்டம் நாடு பூராகவும் செயற்படுத்தப்படவுள்ளது.

மற்றவரால் செய்ய முடியாத வித்தியாசமான செயற்பாடு (Talent), 13-29 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர், யுவதிகளாகிய உங்களிடம் இருக்குமானால், உடனே உங்களுடைய பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரியை தொடர்பு கொண்டு அங்கே விண்ணப்பப்படிவத்தைப் பெற்று பூரணப்படுத்தி எதிர்வரும் 27.07.2016ஆம் திகதிக்கு முன் கிடைக்கக் கூடியதாக ஒப்படைக்குமாறும் இளைஞர், யுவதிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

மேலும் இளைஞர், யுவதிகள் உங்கள் ஊருக்குத் தேவையான பெறுமதியான (project) ஒன்றைத் தயார்படுத்தி எதிர்வரும் 27.07.2016 ஆம் திகதிக்கு முன் உங்கள் பிரதேச செயலகத்திலுள்ள இளைஞர் சேவை அதிகாரியிடம் ஒப்படைக்குமாறும் அதில் தெரிவு செய்யப்படும் சிறந்த (project) க்கு பெறுமதியான பணப் பரிசில்களும் வழங்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களைப் பெற உங்கள் பிரதேச இளைஞர் சேவை அதிகாரியைத் தொடர்பு கொள்ளுமாறும் இளைஞர், யுவதிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான (Talent) திறமையை வெளிக்காட்டும் நிகழ்வு, கல்லடி பாலத்திற்கு அருகில் 2016.08.06ம் திகதி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் 065-2224367, 077-787 4472 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மட்டக்களப்பு மாவட்ட இளைஞர், யுவதிகள் மேலதிக தகவல்களைப் பெறலாம் எனவும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி பீ.எம்.றியாத் எமக்குத் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -