கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்..!

ஏ.எம்.றிகாஸ்-
ம்பள உயர்வு மற்றும் ஓய்வூதிய வயதெல்லையை அதிகரித்தல் உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் 27.07.2016 நண்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு- வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஊழியர்கள் தமது கோரிக்கைகள் கொண்ட வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களுடன் வளாகத்திற்குள்ளிருந்து பேரணியாக பிரதான வீதியோரத்திற்கு வந்து அங்கு கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்க சம்மேளன கூட்டு கமிட்டியினால் அரசாங்கத்திடம் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து கிழக்குப் பல்கலைக் கழக ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -