ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் தாருஸ்ஸலாமில் இஸ்லாமிய சொற்பொழிவு..!

அஸ்ஸலாமு அலைக்கும்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில், அதனது தலைமையகம் தாருஸ்ஸலாமில் இரு வாரங்களுக்கு ஒரு முறை செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ச்சியாக இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர் இடம்பெற்று வருகின்றது அல்ஹம்துலில்லாஹ். 

இத்தொடர் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உலமாக்களினால் நடத்தப்படுகின்றமை விசேட அம்சமாகும். இவ் இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர் அஹ்லாக், தப்ஸீர், ஸீரா, தாரீஹ் ஆகிய நான்கு பிரதான தலைப்புகளில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அந்த வகையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜூலை மாதம் 26 ஆம் திகதி மாலை 7.00 மணிக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில், மௌலவி எம்.எச்.எம். நிஸாம் காஸிமி அவர்களினால் “குடும்ப வாழ்வு” என்ற தலைப்பில் விசேட விரிவுரை நிகழ்த்தப்படவுள்ளது இன்ஷா அல்லாஹ்.

மக்ரிப் தொழுகைக்கான ஏற்பாடுகள் தாருஸ்ஸலாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு பணிவாக வேண்டப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -