கடந்த மஹிந்த ஆட்சியில் ஞானசாரவுடன் விவாதிக்க தயார் என உலமா கட்சி ஞானசாரவுக்கு அறிவித்தது. அவர் அதை ஏற்கவில்லை.
அத்துடன் ஞானசாரவுடன் சாதாரண மக்களை வைத்து ரனில் விக்ரமசின்ங்ஹவின் சகோதரரின் டி என் எல் தொலைக்காட்சியில் விவாதங்களை நடத்தினார்கள். அவற்றின் போது அறிவிப்பாளர் ஒரு பக்க சார்பாக நடந்து கொண்டதன் மூலம் அது மஹிந்தவுக்கு எதிராகவும் ஞானசாரவுக்கும் ரணிலுக்கும் ஆதரவாக நடந்து கொண்டது. ஆகவே தொலைக்காட்சி விவாதங்கள் தவிர்க்கப்பட்டு மூடிய மண்டபத்தில் ஊடகவியலாளர் பிரசன்னத்துடன் விவாதம் நடத்தப்பட வேண்டும்.
ஆனாலும் இத்தகைய ஞான சாரவுடனான விவாதத்தை விட பொதுபல சேனாவை வளர்ப்பது மஹிந்தவா மைத்ரி ரணிலா என்ற பகிரங்க தொலைக்காட்சி நேரடி விவாதமே இன்றைய தேவையாகும். இதில் மஹிந்த மற்றும் மைத்ரி, ரணில், ஆசாத் சாலி, உலமா கட்சி முஸ்லிம் கவுன்சில்,ஜேவிபி என்பன கலந்து விவாதிக்க வேண்டும். இதனை ஏற்பாடு செய்ய அரசால் முடியுமா என உலமா கட்சி சவால் விடுகிறது.