அமைச்சர் றிசாட் பதியுதீனினால் யாழ் மாவட்ட பள்ளிவாசல்களிற்கு குர்ஆன் பிரதிகள் வழங்கப்பட்டது

பாறுக் ஷிஹான்-

கில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் இலங்கை முஸ்லிம்களின் தேசிய தலைவருமான அமைச்சர் றிசாத் பதியுத்தீனால் யாழ் மாவட்ட முஸ்லீம் மக்களுக்கு ரமழான் மாதத்தை முன்னிட்டு பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஊடாக அல் குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (3) இரவு 8 மணியளவில் யாழ் ஒஸ்மானியா கல்லூரி வளாகத்தில் வைத்து அமைச்சரின் பிரதிநிதிகளினால் கையளிக்கப்பட்டது.

இதில் சுமார் 16 பள்ளிவாசல்களிற்கு மகல்லா வாசிகளாக உள்ள அனைத்து மக்களிற்கும் தலா ஒரு குர்ஆன் வீதம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது அமைச்சரின் இணைப்பு செயலாளர் எம்.அன்வர் அமைச்சரின் மக்கள் தொடர்புகள் ஒருங்கிணைப்பாளர் முஜாஹீத் யாழ் மாவட்டத்திற்கான அமைச்சரின் மீள்குடியேற்ற நடவடிக்கைக்கான இணைப்பாளர் பி.எஸ்.எம் சுபியான் மௌலவி யாழ் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அமீன் ஹாஜியார் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் இணைப்பாளர் சீலன் கட்சியின் யாழ் மாவட்ட உறுப்பினர்களான ஆர்.கே.சுவர்ஹஹான் கே.எம்.நிலாம் எம்.ரொக்கீஸ் உட்படபலரும் கலந்துகொண்டனர்

இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் இலங்கை முஸ்லிம்களின் தேசிய தலைவருமான அமைச்சர் றிசாத் பதியுத்தீனால் யாழ் மாவட்ட முஸ்லீம் மக்களுக்கு ரமழான் மாதத்தை முன்னிட்டு உலர் உணவு பொருட்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -