"இளைஞர்களின் எழுச்சியே சமூகத்தின் வளர்ச்சி" என்னும் தொனிப்பொருளை மையமாக வைத்து வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனால் மன்னார் மாவட்ட இளைஞர் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் வளர்ச்சிக்காக பலதரப்பட்ட சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தனது சொந்த நிதியிலிருந்து நேற்றையதினம் மன்னார் உப்புக்குளம் அல் பதா விளையாட்டு மைதான புனரமைப்புக்காக ரூபா 120,000 பணத்தொகையினை அல் பதா விளையாட்டுக்கு கழக உறுப்பினர்களிடம் தனது காரியாலயத்தில் வைத்து கையளித்தார்
இந் நிகழ்வில் முன்னாள் நகர சபை உறுப்பினர் நகுசீன் கழகத்தலைவர் ஹுசைன் , செயலாளர் ஹனூன், பொருளாளர் ஜஹான் மற்றும் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.
மேலும், இவர்களுக்கான விளையாட்டு சீருடையும் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது