முன்னாள் அமைச்சா் பேரியல் அஷ்ரப் 2004ல் சவுதி இளவரசா் நைப் அவா்களின் அழைப்பின் பேரில் உம்ரா கடமைக்காகச் தனது மகன் அமானுடன் சென்றாா். அப்போது அம்பாறை மாவட்டம் சுனாமியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மாவட்டமாகும் இது பற்றிப் சவுதி இளவரசர் உடன் பேசினாா். உடன் சவுதி இளவரசா் நைப் இந்தோணிசியாவுக்கென தயாரிக்கப்பட்ட வீடமைப்புத்திட்டத்தினை இலங்கைக்கு வழங்கும்படி உத்தரவிட்டாா்.
அதற்கமைவாக சவுதி அரசாங்கத்தினால் அக்கரைப்பற்று நுரைச்சோலையில் அரச காணி 50 ஏக்காில் நிர்மாணிக்கவென இவ் அம்பாறை கரையோர பிரதேச முஸ்லீம்களுக்கு சுனாமி வீடமைப்புத்திட்டத்திட்டம் வழங்கப்பட்டது.. இத்திட்டம் அடிக்கல் நடப்பட்டும் நிர்மாணிப்பணிகள் முடிவடைந்து 12 வருடங்களாகின்றன. சிகல உருமைய இத்திட்த்தினை எதிா்த்து அன்று உயா் நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்தது. தீகவாபி காணியில் முஸ்லீம்களை குடியேற்றுவதாக அமைச்சா் பேரியல் எதிராகவே இக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இருந்தும் இக் காணி அக்கரைப்பற்று பிரதேச செயலாளா் பிரிவில் உள்ளது. இக் காணி கூட முஸ்லீம்களது பரம்பரையாக இருந்த காணிகள் அதனை அரசாங்கம் கரும்புச் செய்கைக்காக அப்போது அரசு சுவீகரித்தது
அப்போதைய சவுதி துாதுவர் அழைத்து மிகவும் சிறமத்துக்கு மத்தியில் இத் திட்டத்தினை முன்னளா் அமைச்சா் பேரியல் நிர்மாணித்து முடித்தாா். இந்த அழகாக வீடமைப்புத்திட்டம் முடிவடைந்த நிலையிலும் கடந்த 12 வருடங்களாக இத்திட்டம் மீள கையளிக்கப்படாமல் உள்ளது இதன் பின் வந்த எந்தவொரு முஸ்லீம் தலைமைத்துவமும் இத்திட்டத்தினை முஸ்லீம் சமுகத்திற்கு பெற்றுக் கொடுக்க சாணக்கியம் அற்றவா்களாகவே காணப்படுகின்றனா்.
இத் திட்டத்தில் 500 வீடுகள் , வைத்தியசாலை, சனசமுக நிலையம், சந்தை பள்ளிவாசல் இதுவரையும் திறக்கப்படாமலும் மக்களிடம் கையளிக்கப்படாமல் உள்ளது. இந்த கட்டிடங்கள் மீள உடைந்து பாழடைந்து காணப்படுகின்றது. இதனை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவா்கள் மக்களிடம் கையளிக்காமல் நான்கு சுவருக்குள் அதன்மாதிரி நிர்மாணத்தினைக் அலரி மாளிகைக்குள் கொண்டு வந்து சவுதி துாதுக்களுடன் திறந்து வைத்தாா்.
தற்போதைய முஸ்லீம் தலைமைகள் அமைச்சா்கள் முஸ்லீம் பிரநிதிகள் ஜனாதிபதி ,பிரதமா். அமைச்சரவையிற்கு இவ் விடயத்தினை கொண்டுவந்து இத்திட்டத்தினை மீள்திறந்து கல்முனை தொட்டு அக்கரைப்பற்று வரையிலான வீடுகள் அற்ற 500 முஸ்லீம் குடும்பங்களுக்கு பகிா்ந்தளிக்க நடவடிக்கை எடுப்பாா்களா?
அல்லது இதனை நடைமுறைப்படுத்துவதற்கு வழி தெரியாமல் உள்ளாா்களா, வடக்கில் உள்ள அபிவிருத்தியை தமிழ் தேசிய முன்னணி, வடக்கு முதலமைச்சா் எவ்வாறு கையாழுகின்றாா்கள் என்பதைக் கூட இவா்கள் தெரியாமல் உள்ளாா்களா?
முஸ்லீம்களுக்காக சவுதி சரட்டபள் தர்ம நிதி சக்காத் நிதியம் நிர்மாணிக்கப்பட்டவை இவ் வீடுகள் முஸ்லீம்களுக்கே கையளிக்கப்பட வேண்டும்.