தோல்விகள் மூலம் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதை நம்மவர்கள் உணர்ந்துள்ளார்கள் - அதாஉல்லாஹ்

எம்.ஏ.றமீஸ்-

வெற்றி தோல்வி என்பது இறைவனின் நாட்டப்படி நடப்பதாகும். வெற்றி தோல்வி என்பது மாத்திரம்தான் அரசியல் அல்ல. அரசியலில் மூலம் ஏற்படுகின்ற தோல்வி என்பது இந்நாட்டிலே பல்வேறான விடயங்களை எடுத்துச் சொல்லியிருக்கின்றது என முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸ் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் வைபவம் அக்கரைப்பற்று அதாஉல்லா மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், அரசியலைப் பொறுத்தவரையில் ஒருவர் வெல்லவும் முடியும் தோற்கவும் முடியும். வெற்றியை விட தோல்விகள் மூலம் பல்வேறான செய்திகளைப் புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. தோல்விகள் மூலம் குறிப்பாக முஸ்லிம்களையும் கிழக்கு மாகாணத்தினையும் பொறுத்த வரையில் இந்த நாட்டில் பல்வேறான விடயங்களை எடுத்துச் சொல்லிருப்பதைக் காண முடிகின்றது.

தோல்விகள் மூலம் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதை நம்மவர்கள் உணர்ந்துள்ளார்கள். எமது பணி தேவையா இல்லையா? என்பது பற்றிய நிலைமைகளும் மன மாற்றங்களும் ஏற்படுவதற்கு வெற்றி தோல்வி அவசியமாகின்றது. எமது கட்சியினைப் பொறுத்த வரையில் அதன் பணியினை தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லும். அதன் பணி என்றும் மக்களுக்காக அமையும்.

சில சந்தர்ப்பங்களிலே நாம் எடுக்கின்ற முடிவுகள் அதன் பிற்பாடு ஏற்படுகின்ற விளைவுகளைப் பறிறிச் சிந்திப்பதில்லை. தேசிய காங்கிரஸ் கட்சியினைப் பொறுத்தவரையில் அரசியல் வரலாற்றிலே பல அரசியல் ரீதியான முடிவுகளை எடுத்திருக்கின்றது. அந்த முடிவுகள் யாவும் உரிய முறையில் சரியாக எடுக்கப்பட்டிருக்கின்றன.

நாங்கள் தனிப்பட்ட ரீதியல் நாம் ஒவ்வொருவரும் குற்றம் செய்யாதவர்களாக இருக்க முடியாது. நாங்கள் விடுகின்ற பிழைகள் நம்மைச் சார்ந்தவர்கள் விடுகின்ற பிழைகள் போன்றவற்றை இறைவன் மன்னிக்கக் கூடியவனாக உள்ளான். ஆனால் சமூக ரீதியாக ஒரு விடயத்தினைக் கையாளுகின்றபோது அவற்றிலே நாங்கள் குற்றவாளிகளாக இருக்க முடியாது. சமுதாயத்தினுடைய பிரச்சினைகளை கையாளுகின்றபோது அந்த விடயத்தில் பிழை ஏற்படுகின்றபோது அச்சமுதாயம் அதனை மன்னிக்காத வரை வேறு எவரும் அதனை மன்னிக்க மாட்டார்கள்.

எமது தேசிய காங்கிரஸ் கட்சி நமது சமுகத்திற்காக பல்வேறான சந்தர்ப்பங்களில் பல முடிவுகளை எடுத்திருக்கின்றது. அவ்வாறு எடுக்கப்பட்ட முடிவுகள் பல சந்தர்ப்பங்களில் உடனடியாக தாக்கத்தினை ஏற்படுத்தி இருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் எமது கட்சி எடுக்கின்ற முடிவுகள் உடனடியாகப் புரியாவிட்டாலும் கால ஓட்டத்தில் அது சரியென்று மக்கள் உணர்ந்த வரலாறுகளும் இருக்கின்றன.

இன்றைய சூழ்நிலையில் எமது சமுதாயத்திற்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள் சம்மந்தமாக அரசியல் தலைமைகள் முடிவுகளை எடுக்க முனைகின்றபோது அப்பிரச்சினைகளுக்காக முடிவுகளை கவனமாகவும் நுணுக்கமாகவும் எடுக்க வேண்டும் என கூறுகின்றார்கள். ஆனால் இதனை தேசிய காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மிக உறுதியாகச் சொல்லி வந்திருக்கின்றது.

எமக்கு ஏற்படுகின்ற ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் தீர்க்கமாகவும் தீர்க்க தரிசனத்துடனும் முடிவுகளை எடுக்க வேண்டும். சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு முடிவுகளைச் சொல்லிக் கொண்டு போவர்களாக தலைவர்கள் இருக்க முடியாது. ஒவ்வொரு விடயத்திற்கும் நாம் தீர்வு காண்கின்றபோது அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு முடிவுகளை எடுக்கக்கூடாது. நாம் எடுக்கும் முடிவுகள் அன்றும் இன்றும் என்றும் ஒன்றாகவே இருக்க வேண்டும். அதன் மூலமாக நமது சமூகம் நன்மைகளைப் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

முஸ்லிம்கள் என்போர் நாகரீகம், பண்பாடு, நடவடிக்கைகள் போன்றவற்றில் எப்போதுமே ஒரே மாதிரியாக உள்ளவர்கள் என்னும் நிலைப்பாட்டிற்கு நாங்கள் வர வேண்டும். முன் பின் முரணான கருத்துக்களைச் சொல்பவர்களாக எமது தலைமைகள் இருக்க முடியாது. சிறுபான்மையினராக வாழும் நமது முஸ்லிம் மக்கள் கடந்த கால வரலாற்றிலே அரசர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பிற சமுகத்தினருக்கும் முன்மாதிரியாகவும் நம்பிக்கை உடையவர்காக வாழ்ந்த வரலாறுகளை நாம் மறந்து விட முடியாது.

ஏனைய மதத்தவர்களுடனும் ஆட்சியாளர்களுடனும் நம்பிக்கையாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வந்த நமது தலைமைகள் கால ஓட்டத்தில் மன மாற்றங்கள் சில வித்தியாசமான உணர்வுகள் போன்றவற்றால் நமது முஸ்லிம்கள் சில பிரதேசங்களிலே நம்பிக்கையற்றவர்களாக மாறிவிட்டோம். இதனை நாம் ஒழுங்கு படுத்தி சரி செய்ய வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம். இதற்காக நாம் ஒவ்வொருவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -