எம்.வை.அமீர்-
குறுகிய காலத்துக்குள் நிறைய அங்கத்தவர்களைக் கொண்டு பல்வேறு சமூக நல விடயங்களில் தாங்களை முழுமூச்சுடன் அர்ப்பணித்து, இயங்கி வரும் முஸ்லிம் இளைஞர் சமூக ஆய்வு மையம் தங்களது அமைப்பின் கட்டமைப்பை புனரமைப்புச் செய்துள்ளது.
அந்த அந்த வகையில் அமைப்பின் ஆலோசகர்களில் ஒருவராக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் அமைச்சினுடைய தொடர்பாடல் அதிகாரியாகவும், அதன் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீலின் செயலாளராகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னிலை உறுப்பினராகவும் செயற்படும் அஹமட் லெப்பை முக்தார் (ஜஹான்) என்பவரை நியமித்துள்ளதாக அமைப்பின் தலைவர் இஸ்மாயில் இக்தார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.