அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் இலங்கை முஸ்லிம்களின் தேசிய தலைவருமான அமைச்சர் றிசாத் பதியுத்தீனால் யாழ் மாவட்ட முஸ்லீம் மக்களுக்கு ரமழான் மாதத்தை முன்னிட்டு உலர் உணவு பொருட்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (3) இரவு 8 மணியளவில் யாழ் ஒஸ்மானியா கல்லூரி வளாகத்தில் வைத்து அமைச்சரின் பிரதிநிதிகளினால் கையளிக்கப்பட்டது.
இதில் 800 க்கு அதிகமான உலருணவு பொதிகள் சுமார் 16 பள்ளிவாசல்களிற்கு என வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது அமைச்சரின் இணைப்பு செயலாளர் எம்.அன்வர் அமைச்சரின் மக்கள் தொடர்புகள் ஒருங்கிணைப்பாளர் முஜாஹீத் யாழ் மாவட்டத்திற்கான அமைச்சரின் மீள்குடியேற்ற நடவடிக்கைக்கான இணைப்பாளர் பி.எஸ்.எம் சுபியான் மௌலவி யாழ் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அமீன் ஹாஜியார் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் இணைப்பாளர் சீலன் கட்சியின் யாழ் மாவட்ட உறுப்பினர்களான ஆர்.கே.சுவர்ஹஹான் கே.எம்.நிலாம் எம்.ரொக்கீஸ் உட்படபலரும் கலந்துகொண்டனர்.