பாதயாத்திரையில் ஈடுபட்டோரின் அருவருக்கத்தக்க செயல் - காணொளி இணைப்பு

பேராதெனியவில் உள்ள ஹெட்டம்பே விகாரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று காலை பாதயாத்திரை ஆரம்பமானது.

பாதயாத்திரை ஆரம்பமானபோது விகாரைக்கு முன்னால் உள்ள வீதியால் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி மீது பாதயாத்திரையில் கலந்து கொண்டவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அரசுக்கு எதிராகவும் நாட்டு மக்களை பாதுகாக்கவும் முன்னெடுக்கப்பட்ட குறித்த பாதயாத்திரையின் போது இவ்வாறான சம்பவம் ஏற்பட்டுள்ளமையானது மிகவும் அருவருக்கத்தக்க செயலாக காணப்படுகின்றது.

குறித்த அம்பியூலன்ஸ் வண்டியின் கண்ணாடி உடைக்கப்பட்டதுடன் வண்டியினுள் இருந்த நோயாளி மற்றும் சாரதியை பேரணியிலீடுபட்டோர் அச்சுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -