கதிர்காமத்தில் வயோதிப பிக்குவின் சில்மிசம்...!

புனித தலமான கதிர்காமத்தில் வயோதிப புத்த பிக்கு ஒருவர் சிறுமி ஒருவரிடம் கீழ்தரமான முறையில் நடந்துகொள்ளும் காட்சி பதிவானது.

கதிர்காமம் ஏழுமலை கோயிலுக்கு செல்லும் படிவரிசையில் நின்று கொண்டிருந்த இளம் பெண் ஒருவரின் காலை, வயோதிப பிக்கு ஒருவர் காலால் சுரண்டுவதும் அதற்கு அந்த பெண் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் நிற்பதும் காணொளியில் பதிவானது.

பெண்ணின் உறவினர்கள் குறித்த பெண்ணை அழைத்த போதும் தான் சிறிது நேரம் இவ்விடத்தில் இருந்துவிட்டு வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

பின்னர் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்திய போதும் பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கதிர்காம கந்தன் ஆலயத்தின், ஆடிவேல் விழா ஜூலை மாதம் 5ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானதோடு இம் மாதம் 21ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -