கொரிய நிறுவனத் தலைவர், அமைச்சர் ரிஷாட்டுடன் சந்திப்பு..!

கொரிய நாட்டின் ஹுயான் நிறுவனத்தின் தலைவர் பார்க் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்து கலந்துரையாடினார். 

கொரிய நிறுவனத்தின் முயற்சியில் நீர்கொழும்பு கொச்சிக்கடையில் இயங்கிவரும் சேதனப்பசளைகளை பொதி செய்யும் உறைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் தொடர்பிலேயே அமைச்சருடனான இந்த சந்திப்பு இடம்பெற்றது. 

தொழிற்சாலையின் செயற்பாடுகளை நன்கு விருத்தி செய்தால் பல இளைஞர்களுக்கு தொழில் வழங்க முடியுமென தெரிவித்த அவர் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் உதவிகளையும் தமது நிறுவனம் வேண்டி நிற்பதாக கூறினார். 

இந்தத் துறையில் ஈடுபாடு காட்டும் இலங்கை இளைஞர்களை கொரியாவுக்கு அனுப்பி தொழில்நுட்ப அறிவுகளை வழங்கி பயிற்றுவிக்கும் திட்டம் தமது நிறுவனத்திற்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொரிய நிறுவனத்தின் முயற்சியை பாராட்டிய அமைச்சர், தமது அமைச்சு இவ்வாறான நல்ல பல திட்டங்களுக்கு என்றுமே உதவுமென உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் டீ.டி.எஸ்.பி பெரேரா, அமைச்சின் கைத்தொழில் ஆலோசகர் திரு ரோய், அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம் எம் ஜுனைதீன், பொறியியலாளர் முஸ்தபா பாவா, ஏ.ஆர்.எம் அஸீம் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -