நாமலுக்கு சிறப்பு வசதிகள்...!

கடந்த வாரம் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் நாமல் ராஜபக்ஸவுக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக ஒரு நாளில் மூன்று விருந்தினர்கள் மாத்திரம் கைதி ஒருவரை சந்திக்க முடியும். ஆனால் நாமலை ஏராளமானோர் சந்தித்து செல்கின்றனர். கைதிகள் கையடக்க தொலைபேசி பயன்படுத்த முடியாது. ஆனால் நாமல் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

நாமலுக்கு படுத்து உறங்க மெத்தை வழங்கப்பட்டு உள்ளது. அத்துடன் விசேட பாதுகாப்பும் வழங்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த நேரத்திலும் சிறைச்சாலையை வந்து பார்க்க முடியும் என்பதாலேயே நாமலை சந்திக்க வருகின்ற எம். பிகளை மட்டுப்படுத்த முடியாது இருப்பதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -