விலை குறைப்பு பற்றிய அறிவித்தல்

கட்டுப்பாட்டு விலையை மீறுவோரை சுற்றிவளைக்க 200 பேர் பணியில்

கட்டுப்பாட்டு விலையை தாண்டிய கூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளையும் வர்த்தக நிலையங்களையும் சுற்றிவளைப்பதற்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் 200 புலனாய்வு உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஏ.கே.டி.டி.டி. அரந்தர தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்தவுடன் சுற்றிவளைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் அவர் மேலும் தெரிவித்தார்.

கட்டுப்பாட்டு விலையை தாண்டிய கூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளையும் வர்த்தக நிலையங்கள் குறித்து 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு எந்தவொரு தொலைபேசியிலிருந்தும் அறிவித்து முறைப்பாடு செய்ய முடியும் என பணிப்பாளர் நாயகம் ஏ.கே.டி.டி.டி. அரந்தர குறிப்பிட்டார்.

சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளும் உத்தியோகத்தர்கள் பயணிக்கும் வாகனங்களில் ஜி.பி.எஸ். (GPS) தொழிநுட்ப உபகரணங்கள் பொருத்தப்பட்டிருப்பதால், தலைமையகத்திளிருந்தே அவர்களின் நடவடிக்கைகளை அவதானிப்பதற்கு அதிகாரசபை உரிய நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

(கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள 16 அத்தியவசியப் பொருட்களின் விபரங்கள்:)

சீனி 1 கிலோகிராம் – 95 ரூபா
நெத்தலி (தாய்லாந்து) 1 கிலோகிராம் – 495 ரூபா
நெத்தலி (டுபாய்) 1 கிலோகிராம் – 410 ரூபா
கடலை 1 கிலோகிராம் – 260 ரூபா
பயறு 1 கிலோகிராம் – 220 ரூபா
டின் மீன் – 140 ரூபா
கோழி இறைச்சி (தோலுடன்) 410 ரூபா
கோழி இறைச்சி (தோல் இன்றி) 495 ரூபா
சிவப்பு பருப்பு – 169 ரூபா
இறக்குமதி செய்யப்பட்ட முழு ஆடைப்பால் மா – 810 ரூபா
உள்நாட்டு முழு ஆடைப்பால் மா – 735 ரூபா
கோதுமை மா 1 கிலோகிராம் – 87 ரூபா
உருளைக்கிழங்கு (உள்நாடு) 1 கிலோகிராம் – 120 ரூபா
பெரிய வெங்காயம் 1 கிலோகிராம் – 78 ரூபா
காய்ந்த மிளகாய் 1 கிலோகிராம் – 385 ரூபா
சஸ்டஜன் பால்மா – 1500 ரூபா (ஆ)
கருவாடு (கட்டா) 1 கிலோகிராம் – 1100 ரூபா
கருவாடு (சால) 1 கிலோகிராம் – 425 ரூபா
மாசி 1 கிலோகிராம் – 1500 ரூபா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -