உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு வழங்கப்படவில்லை - அ.அஸ்மின்

என்.எம்.அப்துல்லாஹ்-
12-07-2016 அன்று வடக்கு மாகாணசபையின் 56வது அமர்வு இடம்பெற்றது. இவ்வமர்வில் வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் மீது பொதுமக்களிடமிருந்தும் அமைப்புகளிடமிருந்தும் முறைப்பாடுகள் வந்தவண்ணமிருக்கின்றன என்றும், அவற்றை விசாரித்து நடவடிக்கைகள் எடுப்பதற்கான விசாரணைக்குழுவொன்றினை அமைக்க வேண்டும் என்று கோரும் பிரேரணை மாண்புமிகு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் சபையில் முன்வைக்கப்பட்டது, முதலமைச்சர் வருகை தராத காரணத்தினால் குறித்த பிரேரணையினை முதலமைச்சருக்குப் பதிலாக கல்வி அமைச்சரே முன்வைப்பதற்கு எழுந்து; குறித்த பிரேரணையில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதால் இதனை அடுத்த சபைக்கு ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

குறித்த பிரேரணையில் காணப்பட்ட உள்ளடக்கம் தொடர்பில் சபையில் முரண்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வேளையில் அவைத்தலைவரை நோக்கி வடக்கு மாகாணசபை உறுப்பினரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதியுமாகிய கௌரவ அ.அஸ்மின் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்.

அவைத் தலைவர் அவர்கள் தன்னுடைய கடமைகளையும் பொறுப்புக்களையும் சரிவர நிறைவேற்ற தவறக்கூடாது, இதனை உங்களுக்கு ஒரு அறிவுரையாக நான் கூறவரவில்லை, நீங்கள் மிகுந்த அனுபவசாலி; எனினும் சில நிர்ப்பந்தங்களால் நீங்களும் தவறு விடுகின்றீர்கள், முதலமைச்சரால் முன்வைக்கப்பட்ட பிரேரணையினை நீங்கள் சரி செய்திருக்க வேண்டும்; முதலமைச்சருக்கு அதிகாரமில்லாத விடயம் ஒன்று இப்பிரேரணையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது, இதனை தவிர்த்திருக்க முடியும், அவ்வாறு நீங்கள் செய்திருந்தால் இவ்வாறான வீண் சர்ச்சைகள் எழுந்திருக்க வாய்ப்பில்லை; உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரமொன்றல்ல, அது கட்சித் தலைவர்களுக்கும், பேரவையின் தலைவருக்கும் இருக்கின்ற அதிகாரமாகும். 

மாகாண சபைகள் சட்டமூலத்தில் அவ்வாறான ஒரு விடயமும் கிடையாது. எனவே சட்டரீதியாக அதிகாரமளிக்கப்படாத விடயமொன்றினை பிரேரணையில் உள்ளடக்கியது பேரவைத் தலைவரின் தவறாகவே நான் நோக்குகின்றேன். இவ்வாறான தவறுகளைத் தவிர்ப்பது வீண் சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்கு உதவும் என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -