எம்.வை.அமீர்-
உள்ளுராட்சி சபைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் என்னிடம் பலர் எதிர்காலத்தில் நடக்கவிருக்கின்ற உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவீர்களா? என வினவுகிறார்கள். நான் எனது சொந்த நிதியில் இருந்து பல்வேறு மக்கள் நல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறேன். அதுபோன்று பிரதேசத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி விடயங்களிலும் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகிறேன். மக்கள் என்னால் அவர்களது நலனில் செயற்படமுடியும் எனக்கருதினால் அதேபோன்று எனக்கு ஆசனம் வழங்கப்படுமானால் அரசியல் களத்தில் குதிப்பேனே தவிர, அதற்காக யாரிடமும் மண்டியிட மாட்டேன்.
என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் யஹ்யா கான் பௌன்டேசனின் தலைவரும் தொழிலதிபரும் சமூக சிந்தனையாளருமான யஹ்யா கான் தெரிவித்தார்.
பல்வேறு சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் யஹ்யா கான் பௌன்டேசன் 2016-07-02 ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்ட 10 பயனாளிகளுக்கு குடிநீரை பெறுவதற்கான வசதிகளை வழங்கியது. யஹ்யா கான் பௌன்டேசனின் செயலாளர் ஏ.சீ.எம்.றியால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த காலங்களில் உறுப்பினர்கள் என்ன செய்தார்கள் என்பதை நான் கூறத்தேவையில்லை. மக்களிடம் பல்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அவர்களது அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும். தொடராக மக்களை ஏமாற்ற முடியாது. கட்சி யோசிக்க வேண்டும் யார் மக்கள் நலத்திட்டங்களில் தங்களை பூரணமாக அர்ப்பணித்துச் செயற்படுவர் என்பதை எதிர்காலத்தில் அரசியல் செய்வது என்பது போராட்டமாகவே இருக்கும். எனவே தங்களால் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொடுக்க முடியும் என, நினைப்பவர்களே அந்த பாத்திரத்தை தங்களது கைகளில் எடுக்க வேண்டும். மக்கள் தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டவர்களாக இருக்கின்றனர். எதிர்காலம் போட்டி நிறைந்ததாகவும் இருக்கும். மக்களை ஏமாற்ற முடியாது என்றும் தெரிவித்தார்.
யஹ்யா கான் பௌன்டேசன் கடந்த்த காலங்களில் பல்வேறு சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதேபோன்று எதிர்காலத்திலும் பல்வேருபல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம். பௌன்டேசனின் பிரதித் தலைவரால் முன்வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஊருக்கும் பிரதிநிதிகளை நியமிப்பது சம்மந்தமான கோரிக்கை எதிர்காலத்தில் கருத்தில் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வில் அல்ஜலால் வித்தியாலய அதிபர் எம்.எஸ்.நபார், மஹ்முத் மகளிர் கல்லுரி பிரதி அதிபர் ஆர்.கே.அஸ்மி காரியப்பர்ஜீ,.எம்.எம்.எஸ். வித்தியாலய பிரதி அதிபர் நஸார், வைத்தியசாலை வீதி தபால் அதிபர் முபாறக், அல் ஹிலால் வித்தியாலய ஒழுக்காற்று ஆசிரியர் வுஹாரி உள்ளிட்டவர்களும் பௌன்டேசனின் உயர் மட்ட உறுப்பினர்களும் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.