இராணுவ சதி முயற்சி: நடந்தது என்ன..?

மெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வசித்து வரும் பத்ஹுல்லா கூலன் என்பவரின் தலைமையில் இயங்கும் பயங்கரவாத அமைப்பான Fetullah Terrorise Organization (FETO) துருக்கிய இராணுவத்திலுள்ள அதன் அங்கத்தவர்களின் துணையுடன் ஒரு சதி முயற்சியை கடந்த ஜுலை 15அன்றிரவு மேற்கொண்டது. 240 போரை பலியெடுத்த இந்த சதி முயற்சி, துருக்கிய பொது மக்களினதும் மற்றும் அரச நிறுவனங்களினதும் முன்மாதிரிமிக்க எதிர்ப்பு நடவடிக்கையினால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

FETO என்றால் என்ன?

கூலன் வழிபாட்டுக் குழு (Gulen Cult) எனஅழைக்கப்படும் FETO, பத்ஹுல்லாஹ் கூலன் என்பவரால் வழிநடத்தப்பட்டு வருகின்றது. மூடநம்பிக்கை கொண்ட அவரது சீடர்கள் அவர்தான் எதிர்பார்க்கப்பட மஹ்தி என நம்புகின்றனர். இக்குழு 1970களில் கல்விச் சேவைகள் வழங்கும் ஓர் இயக்கமாகஆரம்பித்தது.

கல்விப் பணியாற்றும் ஓர் இயக்கமாகவே FETO தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறது. அதன் ஊழியர்கள் ஓர் இறுக்கமான கட்டமைப்புக்குள் இருந்து இயங்கி வருவதோடு, வெளி நாடுகளில் தம்மை கல்விச் சேவகர்களாகவும் சமாதானத் தொண்டர்களாகவுமே இனங்காட்டிக் கொள்கின்றனர். இருப்பினும், இவ் இயக்கத்தின் கட்டமைப்பை நாம் அவதானிக்கும்போது, இவர்கள் தமது உண்மையான முகத்தை மறைத்து மிகப் பிரதானமான அரச நிறுவனங்களான இராணுவம், நீதித்துறை, சிவில் பாதுகாப்புத் துறை, புலனாய்வுத் துறை, சிவில் நிர்வாகத் துறை போன்றவற்றினுள் ஊடுருவுகின்றனர். இதற்காக இடதுசாரி, வலதுசாரி,தாராளவாதம் (Liberal) அல்லது பக்தியுள்ள முஸ்லிம் என்ற அடையாளங்களில் ஒன்றை தமது வசதிற்கேற்ப பொருத்திக் கொள்கின்றனர். நிலைமைக்கேற்ப முத்திரையொன்றைக் குத்திக் கொண்டு செயற்படும் இவர்களின் சேவை இயக்கம் Hizmet Movement என்ற பெயரிலேயே வெளிநாடுகளில் இயங்குகின்றன.

FETO இன் குறிக்கோள்

கேந்திர முக்கியத்துவமிக்க ஸ்தாபனங்களைக் கைப்பற்றும் நோக்கோடு பாடசாலைகள், கல்வி-கலாசார,நிறுவனங்கள், தொழில்சார் அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGOS) முதலானவற்றில் வெளிப்படையாக செயற்படுவர். இவர்களது வழிகெட்ட நம்பிக்கைப்படி,

இத்தகைய கைங்கரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு மோசடி, ஏமாற்று, எத்தகைய சுழ்ச்சிகளையும் செய்வது ஆகுமானதாகும். மனிதர்களை இக்கட்டில் மாட்டிவிடல், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடல் அனைத்தும் அனுமதிக்கப்பட்டவையாகும். தமது இலக்கை எப்படியாவது அடைந்து கொள்வது இவற்றைவிடப் புனிதமானது. தமது 'உலக இமாம்' இன் சிந்தனைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் அமைய புதியதோர் உலகை ஒழுங்கமைக்கவே இவர்கள் பாடுபடுகின்றனர். பல்லாண்டு கால இரகசிய பயிற்சி மற்றும் கடுமையான கொள்கைத் திணிப்பு பயிற்சிகளின் பின் சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாதளவு அதியுயர் நிபுணத்துவமுள்ள விற்பன்னர்களாக மாறியுள்ளனர்.

FETO வின் அங்கத்தவர்கள் அதி உன்னத தியாகத்துடன் தமது எதிர்பார்க்கப்பட்ட மஹ்தியின் கட்டளைக்கு அடிபணிகின்றனர். அத்தோடு தம்மை தனித்துவமிக்க சிறப்புப் பொருந்திய மனிதர்கள் எனக் கருதுகின்றனர். இவர்கள் எந்த அணியுடனும் இணைந்து கொள்வார்கள். தமது அடையாளங்களை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்வார்கள். அவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட தயங்குவதில்லை. அவசியமெனில் கொலையும் செய்வார்கள்.

FETO இதுவரைசாதித்ததுஎன்ன?

குறிப்பாககடந்த 10 வருடங்களில் இதில் அங்கத்துவம் பெற்றுள்ள நீதிபதிகள், அரச சட்டத்தரணிகள் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையினர் ஓர் இரகசிய திட்டத்துடன் செயற்பட்டு, தமது திட்டத்துடன் ஒத்துப்போகாத ஏராளமான இராணுவத்தினரையும், பொலிஸ் உத்தியோகத்தர்களையும் சிவில் உத்தியோகத்தர்களையும் போலிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து சிறையில் தள்ளியும் வேறு வழிகளிலும் தண்டித்துள்ளனர்.

2012 இல் நாட்டு நிர்வாகத்தை தம்மால் கைப்பற்ற முடியும் என்ற அவர்களது நம்பிக்கை மேலோங்கியது. அவ்வாண்டு ஒரு சதி முயற்சியை முன்னகர்த்தினர். அதாவது, உளவுப் பிரிவுத் தலைவர் குர்திஷ் தீவிரவாதிகளுடன் இணைந்து சட்டத்துக்கு முரணான வகையில் செயற்படுவதாக குற்றஞ்சாட்டி அவரைக் கைதுசெய்ய முயன்றனர். இச்சதி முயற்சியின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக அமைந்த இந்நிகழ்வு தோல்வியடைந்தது. அதன் பிறகு 2013 டிசம்பர் 17-25 வரைசோடிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் அரசாங்கத்தின் முன்னணி உறுப்பினர்களை சட்டவிரோதமாகக் கைதுசெய்ய முயற்சித்தனர். அதுவும் தோல்வியிலேயே முடிவடைந்தது.

குநுவுழு சமாதானத்தை விரும்பும் மத ரீதியான ஓர் அமைப்பாக தன்னை அடையாளப்படுத்தி சமாதானம்,கலந்துரையாடல் மற்றும் சகிப்புத்தன்மை போன்ற விழுமியங்களை தவறாகப் பயன்படுத்தி வருகிறது. இதனூடாக நாட்டின் பாதுகாப்பு, நீதித் துறைமற்றும் புலனாய்வுத் துறைஆகியவற்றில் இவர்கள் ஊடுருவுகின்றனர்.

ஜுலை 15 அன்று நடந்தது என்ன?

இராணுவத்திற்குள் பின்னிப் பிணைந்திருந்த FETO உறுப்பினர்கள் ஒரு புது விதமான சதிமுயற்சியை மேற்கொண்டனர். கனரகயுத்த உபகரணங்களான, யுத்த விமானம், யுத்ததாங்கிகள் மற்றும் ஹெலிகொப்டர்களைக் கொண்டு தாக்குதல் தொடுத்தனர். குநுவுழுவின் சதியை முறியடிக்க துணிந்து நின்ற பொது மக்களை கொலைசெய்தனர். ஜனாதிபதி வாசஸ்தலம் மற்றும் பாராளுமன்றக் கட்டிடத்தின் மீது யுத்த விமானங்கள் தாக்குதல் நடத்தின. இஸ்தான்பூல், அன்காரா முதலானநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தினர். ஜனாதிபதி ரஜப் தையிப் அர்துகானை கொலைசெய்ய எடுத்த முயற்சியும் தோல்வியடைந்தது. இதன்போது 173 பொதுமக்களும் 62 பொலிஸாரும் 5 இராணுவத்தினரும் உயிரிழந்தனர். சீமார் 1491 பேர் காயமடைந்தனர்.

இந்தசதி முயற்சி வெற்றியளித்திருந்தால் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பலியாகியிருப்பார்கள். சீதந்திரமும் ஜனநாயகமும் கட்டுப்படுத்தப்பட்டு பத்ஹுல்லாஹ் கூலனின் வழிபிறழ்ந்த மத சிந்தனைகளின் அடிப்படையில் ஒரு சர்வாதிகார அமைப்பு கட்டியெழுப்பப்பட்டிருக்கும். இந்தநாசகார முயற்சியை சமூகத்திலுள்ள அனைத்து மக்களும் கட்சி, மதம், இனம் இயக்கம், சிந்தனைப் போக்கு அனைத்துக்கும் அப்பால் நின்று முறியடித்தனர். தொழிலாளர்கள், வர்த்தக அமைப்புக்கள், சமூக நிறுவனங்கள், ஊடகத் துறையினர் என அனைவரும் ஓரணிதிரண்டு சதிக்கெதிராக போராடினர்.

FETO துருக்கிக்குமாத்திரமாஅச்சுறுத்தல்?

அரங்கேறிய சதி முயற்சியிலிருந்து வெளிச்சத்துக்கு வரும் விடயம் யாதெனில், வழிபிறழ்ந்த ஒரு மதநம்பிக்கையின் அடிப்படையில் ஓர் இராணுவ சர்வாதிகாரத்தையே ஸ்தாபிக்க முயற்சிக்கிறது என்பதுதான். அதற்காக அவர்கள் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடுவார்கள். 15 ஆம் திகதியன்று அரங்கேறிய சதிமுயற்சியின்போதும் பொது மக்களைக் கொன்றொழித்தாவது தமது இலக்கை அடைவதற்கே முழு முயற்சியையும் மேற்கொண்டனர்.

இவர்களை சமாதானத்தைப் பரப்பும் ஓர் அமைப்பாகக ருதுவது பொருத்தமற்றதாகும். ஆள்மாறாட்டம் செய்தல், சூழ்ச்சிசெய்தல், இரகசியமாக இயங்குதல் முதலானவற்றில் மிக நுணுக்கமான பயிற்சிகளைப் பெற்றுள்ளதால் இவர்களை இலகுவில் அடையாளம் காண முடியாதுள்ளது. தமது வழிகெட்ட மதநம்பிக்கையின் அடிப்படையில் உருவான அதிகாரத்தைக் கைப்பற்றும் இரகசியத் திட்டத்தை முன்னகர்த்தி வருகின்றனர். எனவே, இவ்வியக்கம் எந்தநாடுகளிலெல்லாம் இயங்கி வருகிறதோ அந்தநாடுகளுக்கும் மனித குலத்துக்கும் அச்சுறுத்தலாகவே அமையும்.

செய்ய வேண்டியது என்ன?

FETO, Boko Haram, ISIS முதலான அமைப்புக்களுக்கு எதிராக முழு உலகும் ஓரணிதிரண்டு அவற்றைஎதிர்த்துப் போராட வேண்டும். இவ் அமைப்புகள் அனைத்தும் தமது வழி தவறிய சிந்தனைகளின் அடிப்படையிலேயே மார்க்கத்துக்கு வியாக்கியானம் வழங்குகின்றன.

இந்தசந்தர்ப்பத்தில் வெளி நாடுகளில் வசிக்கும் எமதுபிரஜைகள், எமது சொந்தபந்தங்கள், எமது உறவுகள்,வெளிநாடுகளிலுள்ள அமைப்புகள் மற்றும் ஜனநாயகத்தை மதிக்கும் மக்கள், நாட்டின் இறைமையையும் மனித உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க எமக்கு வழங்கிய அனைத்து உதவிகளையும் நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம்.

மேலும் நடந்தேறிய சதிமுயற்சியை நாம் மிகவும் வன்மையாக கண்டிப்பதோடு, இதில் உயிர்நீத்த எமது வீரர்களாகிய பொதுமக்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு அல்லாஹ் தனது அருள் மாரியைச் சொரிய வேண்டுமெனவும் படுகாயமடைந்தோர் பூரண சுகம் பெறவும் பிரார்த்திக்கின்றோம்.
தமிழில்: ஆஸிம் அலவி-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -