"முஸ்லீம் சமூகத்துக்கு இஸ்லாம் தொடர்பில் தெளிவில்லாவிட்டால் அவர்கள் எங்களிடம் டியுஷன் வந்து இஸ்லாத்தை படிக்கவேண்டும்" என பொதுபல சேனா அமைப்பின் பொதுசெயளாலர் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிடும் போது இதனை குறிப்பிட்ட அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்;
முஸ்லீம் சமூகத்துக்கு இஸ்லாம் தொடர்பில் தெளிவில்லாவிட்டால் அவர்கள் எங்களிடம் டியுஷன் வந்து இஸ்லாத்தை படிக்கவேண்டும் முஸ்லீம்களில் பலருக்கு இஸ்லாம் தெரியாது. ஹலால் பிரச்சினை வந்த போது மறைந்த அலவி மவ்லானா சில விடயங்களை கூறினார்.மறைந்தவரை பற்றி நாம் கதைக்க தேவையில்லை ஆனால் ஏ எச் எம் பவுசி பாராளுமன்ற தெரிவு குழு கூட்டத்தில் கலந்துகொண்ட போது "எமக்கு குர் ஆண் பற்றி தெரியாது நாம் பரம்பரையில் வந்த விடயங்கள் மூலம் இவற்றை தெரிந்துகொள்கிறோம்" என கூறினார்.
நாம் தஹம் பாசல்களில் எமது மார்கத்தை படித்து கொடுப்பது போல இஸ்லாம் தெரியாதவர்களுக்கு நாம் டியூசன் வைத்து படித்து தருகிறோம் இதனை இங்குள்ள பரம்பரையில் இருந்து இஸ்லாம் படித்தவர்களுக்கும் கோஷம்போடும் அமைப்புகளுவேண்டிக்கோள்விடுக்கிறோம்.
இன்று இஸ்லாம் தொடர்பில் பாகிஸ்தானில் ஒன்றை கூறுகிறார்கள், எகிப்தில் இன்னொன்றை கூறுகிறர்கள் சவுதியில் வேறு ஒன்றை கூறுகிறார்கள் வேறு நாடுகளில் வேறு ஒன்றை கூறுகிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.
Madawala_News