உதவி ஆசிரியர்களுக்கு 7500 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு..!

பாடசாலைகளிலுள்ள ஆசிரிய உதவியாளர்களுக்கு 7500 ரூபாவை வாழ்க்கைச் செலவாக வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை முன்வைத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அரச பாடசாலைகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரிய உதவியாளர்கள் காணப்படுவதாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கல்வி அமைச்சுக்கு முன்னாள் இலங்கை ஆசிரியர் சங்கம் நடாத்திய ஆர்ப்பாட்டத்தையடுத்து, கல்வி அமைச்சருடன் இலங்கை ஆசிரியர் சங்கம் நடாத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானத்தை கல்வி அமைச்சர் அறிவித்ததாக அச்சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -