வஸீம் தாஜுதீன் படு­கொலை தொடர்பில் 10 CD கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு...!

எம்.எப்.எம்.பஸீர்-
பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­டை­யது என நம்­பப்­படும் 10 இறு­வட்­டுக்­களை பொலிஸ் சி.சி.ரி.வி. பிரிவு கொழும்பு மேல­திக நீதி­வா­னிடம் நேற்று கைய­ளித்­துள்­ளது.

பொலிஸ் சி.சி.ரி.வி. பிரிவின் பதில் பணிப்­பாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் டி.பி. கம்லத் இதனை அப்­பி­ரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஏ.என்.டி.ஜி.பி. சென­வி­ரத்ன ஊடாக இதனை கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரி­ஸிடம் கைய­ளித்­துள்ளார்.

கடந்த 2012.05.16 ஆம் திகதி நள்­ளி­ரவு 11.00 மணிக்கும் 2012.05.17 ஆம் திகதி அதி­காலை 2.00 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் பேஸ்லைன் வீதி, ஹைலெவல் வீதி, கிரு­ளப்­பனை சந்தி, நார­ஹேன்­பிட்டி சந்தி ஆகிய பகு­தி­களில் உள்ள பொலிஸ் சி.சி.ரி.வி. பிரிவின் கட்­டுப்­பாட்டில் உள்ள கண்­கா­ணிப்பு கம­ராக்­களில் பதி­வான வீடி­யோக்­களே இவ்­வாறு 10 இறு­வட்­டுக்­க­ளாக மன்றில் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. இவற்றில் இரு சி.டி.க்களும் 8 டி.வி.டி.க்களும் உள்­ள­டங்­கு­கின்­றன.

முன்­ன­தாக கடந்த 8 ஆம் திகதி கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்­னி­லையில் சிறப்பு அறிக்­கை­யொன்­றினை தாக்கல் செய்­துள்ள குற்றப் புல­னாய்வுப் பிரிவு விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்பட்ட சில விட­யங்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

அதன்­படி கடந்த 2012.05.19 ஆம் திக­தி­யன்று கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் விஜே­சிங்க, தாஜுதீன் விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை தாம் முன்­னெ­டுப்­பதால் 2012.05.16 ஆம் திகதி நள்­ளி­ரவு 11.00 மணிக்கும் 2012.05.17 ஆம் திகதி அதி­காலை 2.00 மணிக்கும் இடைப்­பட்ட நேரத்தில் பேஸ்லைன் வீதி, ஹைலெவல் வீதி, கிரு­ளப்­பனை சந்தி, நார­ஹேன்­பிட்டி சந்தி ஆகிய பகு­தி­களில் உள்ள பொலிஸ் சி.சி.ரி.வி. பிரிவின் கட்­டுப்­பாட்டில் உள்ள கண்­கா­ணிப்பு கம­ராக்­களில் பதி­வான வீடி­யோக்­களை பாது­க­ப­பாக வைக்­கு­மாறு அறி­வித்­துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அப்­போ­தைய கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பா­ள­ராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் (தற்­போது பிரதிப் பொலிஸ் மா அதிபர்) டி.ஆர்.எல். ரண­வீ­ரவின் கையெ­ழுத்­துடன் சி.சி.ரி.வி. பிரிவின் பணிப்­பா­ள­ருக்கு கடிதம் ஒன்றும் அனுப்­பட்­டுள்­ளது.

இந் நிலையில் சி.சி.ரி.வி. பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் சோம திலக என்­பவர், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு கோரிய கலப்­ப­கு­திக்­கு­ரிய குறித்த இடங்க்ளின் சி.சி.ரி.வி. பதி­வு­களை 4 சி.டிக்­களில் அபோதே கைய­ளித்­துள்­ளமை விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

இந்த சி.சி.ரி.வி. பதி­வுகள் அப்­போது கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வி­னரால் அவதா­னிக்­கப்பட்­டுள்ள நிலையில் அதன் பின்னர் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் அந்த சி.டி. க்கள் நான்கும் பெறப்­படும் வரை அவை உரிய முரையில் பரா­ம­ரிப்புச் செய்­யப்பட்டு பாது­காப்­பாக வைக்­கப்பட்­டி­ருக்­க­வில்லை என்­பது தெளி­வா­கி­யுள்­ளது.

இவ்­வாறு பாது­காப்­பற்ற முறையில் வைத்­தி­ருந்­த­மையும், குற்றத் தடுப்புப் பிரிவு கோரிய சி.சி.ரி.வி. பதி­வு­களின் கால அள­வி­னையும் வைத்து பார்க்கும் போது பாரிய சந்­தே­கங்கள் ஏற்­ப­டு­கின்­றன.

எனவே குரித்த காலப்ப்­கு­திக்­கு­ரிய சி.சி.ரி.வி. பதி­வு­களை வெவ்வே­றாக மன்ரில் சமர்­பிக்க பொலிஸ் சி.சி.ரி.வி. பிரி­வுக்கு உத்­தர்­வி­ட­வேண்டும் என அந்த அறிக்­கையில் குற்றப் புல­னாய்வுப் பிரிவு கோரி­யது.

அதற்கு அமை­வாக அவற்ரை சமர்­பிக்க நீதி­மன்ரம் உத்தரவும் பிரப்­பித்­துள்­ளது. இந் நிலை­யி­லேயே நேற்று புதிதாக 10 இறுவட்டுக்கள் நீதிமன்றில் சமர்பிக்கப்ப்ட்டுள்ளன.

கடந்த 2012.05.17 ஆம் திகதியன்று நாரஹேன்பிட்டி சாலிகா மைதான மதிலுடன் மோதிய நிலையில் எரிந்துகொன்டிருந்த காருக்குள் இருந்து வஸீம் தாஜுதீன் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -