ஜனா­தி­பதிக்கு மீண்டும் சீனா அழைப்பு..!

ரு­நாட்டு உறவை மேலும் வலுப்­ப­டுத்தும் வகையில் ஜனா­தி­பதி மைத்திரிபால சிறி­சே­ன­வுக்கு சீன ஜனா­தி­பதி ஜின் பிங் விசேட அழைப்பு விடுத்­துள்­ள­தாக அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார்.

அரச தகவல் திணைக்­க­ளத்­தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற ஊடகவி­ய­லாளர் சந்­திப்பி­ன் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்;

எமது நாட்டில் ஆட்சி மாற்றத்­தினை தொடர்ந்து சீனா­வு­ட­னான பொரு­ளா­தார உறவும் அர­சியல் உறவும் முற்­றாக பாதிப்­பட்­டுள்­ள­தாக எதி­ரப்­புக்கள் பல விமர்­சங்­களை முன்­வைத்­தி­ருந்­தன.

இது தொடர்பில் அர­சாங்கம் எது­வி­த­மான கருத்­துக்­க­ளையும் முன்­வைக்­காத நிலை­யி­லேயே எதிர்­த­ரப்­புக்கள் இவ்­வா­றான கருத்­துக்­களை வெளி­யிட்டு வந்தன.

இந்­நி­லையில் கடந்த காலங்­களில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் சீனா­விற்­கான விஜயம் மேற்கொண்டிருந்த போது பொரு­ளா­தாரம் மற்றும் அர­சியல் உடன்படிக்கைகள் கைசாத்­திடப்­பட்­ட­ன. அதனால் இரு­நாட்டு பொரு­ளா­தார உற­வுகள் வலு­வ­டைந்­தன.

இந்­நி­லையில். தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சீனாவிற்கான விஜ­ய­மொன்றை மேற்கொள்­ளு­மாறு சீன ஜனா­தி­பதி ஜின்பிங் விஷேட அழைப்பு விடுத்­துள்­ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -