உலகின் எந்த பகுதியில் இருந்தாலும், எதிர்வரும் எட்டாம் திகதி பாராளுமன்ற அமர்வில் பங்குபற்ற வேண்டும் என ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, மஹிந்த ஆதரவு கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை, எதிர்வரும் எட்டாம் திகதி பாராளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளது. இதில் கலந்து கொள்வது அனைத்து ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய தற்போது வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ள அரசாங்கத் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வேறு நிகழ்வுகளுக்கு நேரம் ஒதிக்கியுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் பயணங்கள் மற்றும் நிகழ்வுகளை இரத்துச் செய்து விட்டு பாராளுமன்ற நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.