காலம் சென்ற அலவி மெளானாவின் ஜனாசாவை பார்வையிட இலங்கையின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் இன்று அவரது இல்லைத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தினர்.
மூத்த அரசியல்வாதியும், தொழிற் சங்கவாதியுமான அஷ்-ஷெய்யத் அலவி மௌலானா சிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் தனது 85வது வயதில் நேற்று -15 தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார்.
இவர் கடந்த கால அரசாங்கங்களில் அமைச்சர், பிரதி அமைச்சர் பதவிகளையும் வகித்து இறுதியில் இவர் நீண்டகாலமாக மேல் மாகாண சபையின் ஆளுநராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
அனாரின் ஜனாஷா இன்று மாலை 03.00 மணியளவியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்தி : நாசிரூன்.