ரவி கருநாணாயக்க மீதான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று கூடிய நாடாளுமன்றத்தின் போது நிதி அமைச்சர் ரவி கருநாணாயக்க மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 51 வாக்குகளும், எதிராக 145 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கையில்லாப் பிரேரணை 94 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

இதன்போது மஹிந்த ராஜபக்ஸ, த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர்கள், ஆறுமுகன் தொண்டமான், சந்திர ஸ்ரீ கஜதீர, மற்றும் ஸ்ரீலத் தம்லத் உட்பட 28 பேர் நாடாளுமன்றிற்கு சமூகமளித்திருக்கவில்லை, மேலும் இதன்போது ஈ.பி.டி.பி யின் பொதுச் செயலாளர் டக்ளஸ் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை மீது ஆதரவாக வாக்களித்திருந்தார்.

மேலும், இந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீது மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று விவாதத்திற்கு எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -