மறைந்த மு.சிவசிதம்பரம் அவர்களின் 14வது வருட நினைவுதின கண்ணோட்டமும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும்

சட்டத்திரணி எஸ்.எம்.ஏ.கபூர் -

தமிழர் விடுதலைக் கூட்டணயின் முன்னாள் தலைவர் மு.சிவசிதம்பரம் அவர்களின் 14 வது வருட நினைவுதின நாளில் அன்னாரின் அருமை பெருமைப் பற்றி ஒரு சில முக்கிய குறிப்புக்களை இங்கு குறிப்பிடலாமென எண்ணுகின்றேன். 

1956 களில் பருத்தித்துறை தொகுதியில் அடியெடுத்து வைத்த மு.சிவசிதம்பரம் அவர்கள் 1960 களில் உடுப்பிட்டி தொகுதியில் வெற்றிப் பெற்றார். பின்னர் 1967ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இவர் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழரசு கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற கட்சிகளில் முக்கிய பதவிகள் வகித்த இவர் மறைந்த தந்தை செல்வநாயகம், மு.திருச்செல்வம், அ.அமிர்தலிங்கம், ஜி.ஜி.பென்னாம்பலம் போன்ற முதுபெரும் அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் தமிழர்களின் விடுதலைக்காக போராடி மறைந்தார். 

மேற்படி போராட்டங்களில் குறிப்பாக 1961ம் ஆண்டில் இடம்பெற்ற தமிழ் சத்தியா கிரகத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டவராவார் என்பதை இங்கு குறிப்பிட்டு கூற முடியும். 

பாராளுமன்றத்தில் உப சபா நாயகராகவும் கடமைப் புரிந்த காலத்தில் கொழும்பு நீதி மன்றத்தில் கூட பல பிரபல்யமான வழக்குகளில் தோன்றி தனது ஆங்கில புலமை மூலம் சிம்மக்குரலோன் என பெயர்பெற்ற இவர் இனப் பிரச்சினை தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அஷ;ரப் அவர்களுடனும் தனிப்பட்ட ரீதியில் மட்டுமல்ல கட்சி ரீதியாகவும் பல் வேறு பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டு முஸ்லிம்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் மதித்து வந்த மாமனிதர் என்றால் அது மிகையாகாது. 

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அங்கு வந்து குடியேற்றப்படும் வரை தான்; அம்மண்ணில் சென்று குடியேற மாட்டேன் என பகிரங்கமாக சவால் விட்டு தனது மன ஆதங்கத்தை வெளியிட்டு வந்தார்.

மறைந்த அமைச்சர் அஷ;ரப் அவர்கள் துறைமுக அபிவிருத்தி கப்பல்துறை புணர்வாழ்வு புணரமைப்பு அமைச்சராக இருந்த போது 1983ம் ஆண்டு இனக்கலவரத்தால் தாக்கப்பட்டு மு.சிவசிதம்பரத்தின் கொழும்பு நெரிஸ்கெனல் வீதி வீடு தீயிட்டு கொழுத்தப்பட்டது. அதனால் பாதிக்கப்பட்ட இவருக்கு நஷ;டயீடு வழங்க அமைச்சர் அஷ;ரப் அழைத்தப்போது அந்த நஷ;டயீட்டுப் பணத்தைப் பெற தான் விரும்பவில்லை என மறுத்துவிட்டார். எனது தமிழ் மக்கள் அகதிகளாக அங்குமிங்கும் அல்லல்படும் போது நான் மட்டும் எப்படி இந்த நஷ;டயீட்டுத் தொகையை பெற முடியும் எனவும் அது எனது மனசாட்சிக்கு விரோதம் எனக் கூறி அதனை நிராகரித்துக் கொண்டார். அப்போது மேற்படி புணர்வாழ்வு புணரமைப்பு அமைச்சில் நான் அஷ;ரப் அமைச்சரின் இணைப்புச் செயலாளராக கடமைபுரிந்தபோது எனக்குத் தெரிந்த இந்த உண்மைகளை இப்போதாவது எழுதியாக வேண்டும் என எண்ணுகின்றேன். 

கொழும்புத் தலைநகரில் பிரபல்யமான ஹோட்டலில் மறைந்த தமிழ் தந்தை செல்வநாயகத்திற்கு நினைவு விழா ஒன்று முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வு மறைந்த அஷ;ரப் அவர்களின் தலைமையில் நடைபெற்றப்போது இந்நாட்டில் உள்ள எல்லா தமிழ் அரசியல் கட்சி தலைவர்களையும் ஒன்றாக அழைத்து பிரமாண்டமான மாபெரும் கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இக்கூட்டத்துக்கு பிரதம விருந்தினராக மறைந்த மு.சிவசிதம்பரம் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். அன்னாருக்கு மாலையிட்டு மரியாதைச் செய்து வரவேற்கும் பொறுப்பை மறைந்த தலைவர் அஷ;ரப் அவர்கள் கட்சியின் மூத்த முதல் தொண்டன் என்ற வகையில் என்னை சரியாக அடையாளம் கண்டு கௌரவப்படுத்தி அந்நிகழ்வில் இதனைச் செய்யுமாறு வேண்டிக் கொண்டார். அதன் படி அன்னாருக்கு நான் மாலை அணிவிக்கும் போது எடுக்கப்பட்ட இப் புகைப்படத்தில் இன்றைய எமது தேசிய தலைவரும் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களும் மசூர் மௌலானாவும் பார்த்துக்கொண்டிருப்பதனையும் மற்றும் மறைந்த மருதூர் கனி, மட்டுநகர் முன்னால் முதல்வர் சொல்லின் செல்வன் செ.இராஜதுரை, திரு. ஆனந்த சங்கரி போன்றோருகளும் அம்மேடையில் அமர்ந்திருப்பதை காணலாம்.

தமிழ் தலைவர்களை இப்படித்தான் எமது முஸ்லிம் சமூகமும் எங்களது கட்சியும் அன்று முதல் இன்று வரை மதித்து வந்துள்ளது என்பதற்கு இதுவொரு நல்ல சான்று. 

முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கல்முனைக்கு வந்து எமது அஷ;ரப் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு எமது கட்சியை ஆசீர்வதித்துச் சென்றார். அப்போது அவர் பேசுகையில் கூறினார் ஷஷஇழப்பதற்கு என்னிடத்தில் இனி எதுவும் இல்லை எனவும் நான் தற்போது அணிந்திருக்கும் இந்த வேட்டியும் சேட்டையும் தவிர|| என தெரிவித்தார். மேற்படி கூட்டத்தில் மறைந்த அ.அமிர்தலிங்கமும் அப்போதைய அம்பாறை மாவட்ட சபை உறுப்பினர் திரு.வேல்முருகு, திரு.ஆனந்த சங்கரி, பட்டிருப்பு முன்னால் எம்.பி.கணேசலிங்கம், தமிழ் அரசு கட்சி கல்முனை முக்கியஸ்தரான கந்தையா நொத்தாரிஸ் போன்ற இப் பகுதி பலம்பெரும் தமிழ் தலைவர்கள் கலந்து கொண்ட இக் கூட்டத்தை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக இருந்து நெறிப்படுத்தியவன் என்ற வகையில் மேற்படி குறிப்புக்களையும் உண்மைகளையும், உரிமையுடன் தெரியபடுத்தலாம் என நான் எண்ணுகிறேன். 

இந்த பழைய தமிழ் முஸ்லிம் உறவுகளும், பரஸ்பர இணைப்புகளும் இந்நாட்டில் எப்பொழுதும் அன்று தொட்டு இன்று போல நின்று நிலைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். இவைகளின் ஆழமும் அகலமும் ஆரம்பமும் பற்றி கட்சியின் இன்றையவர்களும் இப்போதாவது எங்களையும் எங்களின் அடையாளங்களையும் இவர்கள் தெரிந்து புரிந்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிடுகின்றார் முஸ்லிம் காங்கிரஸின் மூத்த பொது செயலாளரும், அக்கட்சியின் உயர்பீட, அரசியல் விவகார பணிப்பாளருமான சிரேஷ;ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் அவர்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -