பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு..!

ண்மையில் நாடெங்கிலும் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக புளத்கௌபிட்டிய களுபான பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்களின் பணிப்புக்கமைய இன்று (09-06-2016) புளத்கொஹுபிட்டிய களுபான தோட்டத்தில் இடம்பெற்றது. 

கடந்த மாதம் 17ம் திகதியன்று இரவு இடமபெற்ற மண்சரிவு காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆதலால் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் அவ்விடங்களிலிருந்து வேறு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 20ம் திகதி புளத்கொஹுபிட்டிய களுபான தோட்டத்திற்கு விஜயம் செய்து இவ் மக்களை சந்தித்த மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 வீடுகளை நிர்மாணித்து தருவதாக உறுதியளித்தார். இதற்கமைய 7 பேர்ச் காணிகளில் ஒவ்வொன்றும் 550 சதுரஅடி அளவுள்ள 100 தனி வீடுகள் அமைபபதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (09-06-2016) இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்; சுஜித் பெரேரா அவர்கள், மத்திய மாகாண சபை உறுப்பினர் சரஸ்வதி சிவகுரு அவர்கள், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் வீ. புத்திரசிகாமணி அவர்கள் கௌரவ அமைச்சரின் ஆலோசகர் எம். வாமதேவன் அவர்கள், கௌரவ அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமார் அவர்கள் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் கேகாலை மாவட்ட அமைப்பாளர்களாகிய எஸ். சோமசுந்தரம் அவர்கள் எஸ். மந்திரகுமார் அவர்கள் உட்பட ஏனையோர் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -