துடைப்பத்தால் தாக்கி இரண்டரை வயது குழந்தையை கொலை செய்த சந்தேக நபரொருவரை மஹியங்கனை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த குழந்தையின் தாய் கைது செய்யப்பட்ட பின்னரே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதான திருமணம் முடித்த சந்தேக நபரான பெண், கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியில் வந்து தனது குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் அந்த பெண்ணுக்கு குறித்த சந்தேக நபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
அண்மையில் அந்த குழந்தை சந்தேக நபருடன் விளையாடிக் கொண்டிருந்த போது, தனது நகத்தினால் அவரை கீறியுள்ளது.
இதனால் கோபமடைந்த அந்த சந்தேக நபர், குழந்தையை துடைப்பத்தால் தாக்கி கொலை செய்ததாக குறித்த பெண் காவற்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக 29 வயதான குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.