சற்று முன் (06) ஏறாவூர் ஆற்றாங்கரையில் சடலமொன்று மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எறாவூர் பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய எறாவூர் ஆற்றங்கரைக்குச் சென்றபோது சடலம் ஒன்று கரையொதுங்கிய நிலை காணப்பட்டது. குறித்த சடலம் அப்துல் மஜீத் மாவத்தையை சேர்ந்த கூலித்தொழிலாளி அன்சார் என உரவினர்களால் அடையாளம் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலும், இவர் கோழி இறைச்சி கடை கழிவுகளை சைக்கிளில் ஏற்றிச்சென்று ஆற்றங்கரையோரமாகவுள்ள குப்பை மேட்டில் போட்டுவிட்டு, மேல் கழுவுவதற்காக ஆற்றுக்குள் இறங்கியபோது வலிப்பு நோய் ஏற்பட்டு நீரில் மூழ்கி மரணித்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை ஏறாவூர் பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல்:
திடீர் மரணவிசாரனை அதிகாரி
ஏறாவூர் நஸீர் ஹாஜி.