அம்பாறையில், மதம் மாறியதால் 21 வயது மகளை அடித்துக் கொன்று புதைத்த தாய்..!

ம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் தாயார் ஒருவர் தான் பெற்ற 21 வயதுடைய மகளை அடித்து கொலைசெய்து வீட்டின் பின்னால் நிலத்தில் புதைத்துள்ள சம்பவம் தொடர்பாக தாயாரை இன்று வியாழக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக மத்தியமுகாம் பொலிசார் தெரிவித்தனர்.

மத்தியமுகாம் 6ஆம் பிரிவு 11ஆம் கொலனியைச் சேர்ந்த 21 வயதுடைய செல்வநாயகம் ஜனனி என்பவரே இவ்வாறுஅடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் இது பற்றி தெரியவருவதாவது குறித்த வசித்துவரும் 55 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயாரான இவரின் 5 பிள்ளையான செல்வநாயகம் ஜனனியை கல்முனை வைத்தியசாலையில் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டவர் திருமணம் முடித்து கணவனின் வீட்டில் வாழ்ந்துவந்துள்ளதுடன் கணவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார்

இதனை உயிரிழந்தவரின் தாயார் கேள்விப்பட்டுள்ளார் சம்பவ தினமான 31ஆம் திகதி இரவு உயிரிழந்தவர் தாயாரின் வீட்டிற்குச் சென்று அங்கு தங்கிவிட்டுவருவதற்காக சென்றுள்ளார் இந்த நிலையில் தனியாக வாழ்ந்துவரும் தாயாருக்கும் மகளுக்கும் மதம் மாறியது தொடர்பாக வாய்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து தாயார் கட்டில் பலகையால் மகள் மீது தாக்கியதையடுத்து மகள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்த மகளின் உடலை தூக்கிச் சென்று வீட்டின் பின்பகுதியில் உள்ள நிலத்தில் கிடங்குவெட்டி புதைத்துள்ளார். இதன் பின்னர் மகளை காணவில்லை என நேற்றையதினம் புரளியைகிளப்பிவிட்டுள்ள நிலையில் பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து பொலிசார் இன்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையின்போது தாயார் தான் கொலை செய்து வீட்டின் பின்பகுதியல் புதைத்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளது .

குறித்த தாயாரை பொலிசார் கைதுசெய்துள்ளதுடன் புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டுவதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதுவரை சடலம் புதைக்கப்பட்ட பகுதியில் பொலிசார் காவற்கடமையில் ஈடுபட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை மத்தியமுகாம் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -