எம்.ஐ.எம்.நாளீர்-
தேசிய மரநடுகை வாரத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் நிழல் தரும் மரங்கள் நடும் தேசிய நிகழ்வு கல்லூரி அதிபர்.ஏ.ஜனூர்டீன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பதிவாளர் ஐ.பியாஸ், உதவி அதிபர் எஸ்.எச்.எம்.சல்மான், மற்றும் விரிவுரையாளர்களான, எம்.எம்.சஃபான், எஸ்.எல்.எம்.நஸ்வர், எம்.ரமணீதரன், எம்.ஏ.நஸீர், கல்லூரி மாணவன் உஷாம், கல்லூரியின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆர்.சந்திரகுமார் ஆகியோர் மரங்களை நடுவதையும் , கலந்து கொண்டோரையும் படங்களில் காணலாம்.