கிழக்கில் இடம்பெற்ற சம்பவம் மீளவும் இடம்பெறக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரி ஒருவரை திட்டிய சம்பவமானது படைவீரர்களை இழிவுபடுத்தும் செயற் திட்டத்தின் ஓர் கட்டமாகும். எந்தவொரு தரப்பு அரசியல்வாதி என்றாலும் படைவீரர்களை இவ்வாறு பேசக் கூடாது.
யாழ்ப்பாணத்தில் முகாம் ஒன்றிற்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத்து மீறி பிரவேசிக்க மேற்கொண்ட முயற்சிக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சரின் நடவடிக்கையை நிகர்ப்படுத்தலாம்.
இவ்வாறான சம்பவங்கள் மீளவும் இடம்பெறாமல் இருப்பதனை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
