சாய்ந்தமருது அல் ஹிலாலில் வித்தியாலய மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு...

எம்.வை.அமீர் - 

சாய்ந்தமருதில் பிரபல்யமிக்க பாடசாலைகளில் ஒன்றான அல் ஹிலால் வித்தியாலயத்தில், மாணவத்தலைவர்களாக பணியாற்றும் மாணவ மாணவிகளுக்கு, சின்னம் சூட்டும் நிகழ்வு 2016-05-10 ஆம் திகதி பாடசாலை முற்றலில், அதிபர் எம்.எஸ்.எம்.பைசால் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர், டி.கே.டி.ஹேமந்த டிக்கோவிட்டவும் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுபிள்ளை விசேட வைத்திய நிபுணர், வைத்திய கலாநிதி விஜி திருக்குமாரும் கலந்து கொண்டனர். 

மாணவிகளுக்கு வைத்திய கலாநிதி விஜி திருக்குமாரும், மாணவர்களுக்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.கே.டி.ஹேமந்த டிக்கோவிட்டவும் சின்னங்களை அணிவித்தனர். இங்கு உரையாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சகர், கல்வியின் ஊடாக உயர்வடைந்துள்ளவர்களைப் பின்பற்றி மாணவர்கள் தங்களது வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ள வேண்டும் என்றும், கற்கும் சிறந்த கல்வியின் ஊடாக நாட்டுக்கு நல்ல பிரஜைகளாக வாழ்வதுடன் தாய்த்திருநாட்டின் அபிவிருத்தியிலும் தங்களது செல்வாக்கை செலுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

கௌரவ அதிதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுபிள்ளை விசேட வைத்திய நிபுணர், வைத்திய கலாநிதி விஜி திருக்குமார் தனது உரையில், மாணவர்கள் தாங்கள் கற்கும் விடயங்களை விளங்கி அறிக்கையிடலின் ஊடாகவும் தாங்கள் கல்விகற்று எதிர்காலத்தில் எவ்வாறான உயர் நிலையை அடைய வேண்டும் என்று மனதில் திட்டத்தை வைத்துக்கொண்டு, குறித்த இலக்கை நோக்கி நகர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஒழுக்காற்று பிரிவு ஆசிரியர்களான எம்.எம்.புகாரி மற்றும் எம்.எஸ்.எஸ்.சிப்லி ஆகியோரது வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர் றிப்கா அன்சார் பகுதித்தலைவர் எம்.எம்.இப்ராஹிம் உட்பட ஆசிரியர்களும் ஆசிரிகைகளும் மாணவர்களும் கந்து கொண்டனர். 

நிகழ்வில் பாடசாலைக்குள் வரும் பார்வையாளர்களுக்கான பார்வையாளர் அட்டையும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -