பேறுவளைக்கு ஓர் நளீம் ஹாஜியாரை போன்று காத்தான்குடிக்கு ஓர் ஷிப்லி பாரூக்..!

அஹமட் இர்ஷாட் -
பேறுவளையில் ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்து எழிமையான வாழ்க்கையினை ஆரம்பித்த உலகம் போற்றும் அறிவுத் தந்தை அல்ஹாஜ் நளீம் அவர்கள் 2005 ஆகஸ்ட் மாதம் வபாத்தானார்கள். அல்ஹாஜ் நளீம் ஹாஜியின் மகத்தான பணிகளை நினைவுகூரும் போது கிழக்கிலே பொறியலாளர் ஷிப்லி பாரூக்கின் சமூக சேவைகளும் நளீம் ஹாஜியாரின் சேவைகளை போலிருப்பது மிகவும் மகிழ்ச்சி தரக் கூடிய விடயமாக இருப்பதனை நான் உணர்கின்றேன்.

நளீம் ஹாஜியாரைப் பொறுத்தவரையில் அவர் எந்த ஒரு விடயத்தையும் இம்மை, மறுமை என்று நோக்குவதில்லை. அனைத்தையும் ஆழமான இஸ்லாமிய நோக்குடனேயே பார்ப்பார். அவருடன் எந்தவொரு அமர்வில் இருந்தாலும் அதில் ஆன்மிகம் தொடர்பான வார்த்தைகள்தான் அதிகமாக இருக்கும். 

நிருவாகத்துறையோடு சம்பந்தப்பட்ட, பொருளாதார விடயங்களோடு தொடர்பான அனைத்திலும் ஆழமான இறை நம்பிக்கையும் இறையச்சமும் கலந்திருக்கும். அவருடைய அசாதாரண வெற்றிக்கு இதுதான் அடிப்படை என்பதை உறுதியாகச் சொல்லலாம். அந்த வகையிலேயே நளீம் ஹாஜியாரிடம் இருந்த அனேகமான பண்புகளை பொறியியலாளரும் மாகாண சபை உறுப்பினருமான ஷிப்லி பாரூக்கின் வாழ்க்கையில் செயல் வடிவமாக இருப்பதனை நான் காண்கின்றேன்.

நமீம் ஹாஜியாரைப் பொறுத்தவரையில் எந்தவொரு விவகாரத்திலும் நேரம் தவறாமல் உரிய நேரத்தில் மேற்கொள்கின்ற அழகிய முன்மாதிரி அவருக்கு இருந்தது. இன்று எம்முடைய சமூகத்தில் புத்திஜீவிகளிடம் கூட குறைந்திருக்கின்ற இந்தப் பண்பு ஹாஜியாரிடம் நிறையவே இருந்தது. அதேநேரம் ஏதாவது கூட்டங்கள் அமர்வுகளுக்கு ஏனையவர்கள் தாமதித்து வருவதைக் கூட அவர் விரும்பமாட்டார். 

சிலபோது அவர்களை அவ்விடத்திலேயே கண்டிப்பவராகவும் இருந்தார். இதுவும் அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய முன்மாதிரிதான். அவ்வகையான ஓர் முன்மாதியினை தானும் வைத்திருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கோடு தனது அரசியல் பயணத்தினை தொடர்கின்ற ஓர் இஹ்லாசான துடிப்பான இளைஞனாகவே நான் காத்தான்குடி மண் ஈன்றெடுத்த பொறியியலாளர் ஷிப்லி பாரூக்கினை காண்கின்றேன்.

மிகவும் துணிச்சல் நிறைந்தவர் நளீம் ஹாஜியார். எந்த ஒரு விடயத்தையும் செய்வதற்கு முன்பும் நன்கு சிந்திப்பார், கலந்தா லோசிப்பார். முடிவெடுத்தால் துணிச்சலாக நிறைவேற்றுவார். அல்குர்ஆனின் வார்த்தைகளும் ‘நீங்கள் ஒரு விடயத்தில் உறுதி பூண்டால் அல்லாஹ் மீது பூரணமான நம்பிக்கை வையுங்கள்’ என்றே கூறுகிறது. இவ் அல்குர்ஆனிய வார்த்தைகளை நளீம் ஹாஜியார் நடைமுறைப்படுத்திக் காட்டியிருக்கிறார். இவ்வகையான நளீம் ஹாஜியாரிடம் இருந்த அனேகமான பண்புகள் சகோதரர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக்கிடன் அனேகமாக காணப்படுவதனை நான் அவதானிக்கின்றேன்.

நளீம் ஹாஜியாரின் இளமை வாழ்வு மிகவும் வறுமைமிக்கதாக இருந்தது. பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்வினை நடத்திச் சென்றிருக்கிறார். எனினும் அவர் பிற்காலத்தில் பெரிய கொடையாளியாகவும் தேசிய, சர்வதேச மட்டத்தில் புகழ் பெற்ற போதும் எளிமையான மனோநிலையுடனேயே இருந்தார். அவரைப் பற்றி யாரும் புகழ்ந்து பேசினால் அல்லது பாராட்டினால் அவர் கூறும் வார்த்தை இதுதான் ‘என்னைப் போன்ற ஆற்றலிலும் அறிவிலும் குறைந்த ஒருவனைக் கொண்டு அல்லாஹ் எப்படி வேலைகளைச் செய்ய வைத்திருக்கிறான். 

இவ்வாறான சக்தி படைத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் அல்ஹம்துலில்லாஹ்’என்று சாதாரணமாக கூறிவிடுவார். பெருமையோ, கர்வமோ அவருக்கு ஏற்பட்டதில்லை. இப்பண்பினை எமது சமூகத்தில் பணம்படைத்த, அறிவு ஆற்றல் மிக்க எல்லோரிடமும் காணமுடியாது. இவ்வகையான பண்புகளை சகோதரர் பொறியியலாளர் ஷிப்லியும் வைத்திருப்பதானது என்னை இவ்வாறான ஓர் கட்டுரையினை எழுத தூண்டியது.

நளீம் ஹாஜியாரிடம் இருந்த ஓர் விஷேட பண்பு எந்த ஒரு விடயத்திலும் தூர நோக்குடனேயே அவர் சிந்திப்பார். 1973 ஆம் ஆண்டு நளீமிய்யா உருவாக்கப்பட்ட போது அதனை இருபதுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் உருவாக்கத் திட்டமிட்டார். அப்போது பிரதேச மக்களும் புத்திஜீவிகளும் கூட ஒரு அரபு மத்ரஸாவுக்காக ஏன் இவ்வாறு நிலத்தையும் பணத்தையும் செலவு செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்கள். 

ஆனாலும் ஹாஜியார் அதனை தன்னுடைய சிந்தனையில் வெறும் மத்ரஸா என்ற நிலையில் இல்லாமல் முன்னோடிப் பல்கலைக்கழகமாக நினைத்து நீண்டகால திட்டத்தின் அடிப்படை யிலேயே உருவாக்கினார். மேற்சொன்ன பண்புகள் நளீம் ஹாஜியாரின் வாழ்வில் நான் கண்ட, அவருடைய வெற்றிக்கு காரணமாய் அமைந்தவையாகச் சொல்ல முடியும். அவ்வாறே பொறியியலாளர் ஷிப்லி பாரூக் தான் மாகாண சபையில் ஓர் உறுப்பினராக இருந்தாலும் தான் எடுத்துவைக்கின்ற அல்லது துணிச்சலோடு மேற்கொள்கின்ற ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையானதும் நளீம் ஹாஜியாரின் சிந்தனையினை ஒத்ததாக இருப்பதாகவே நான் பார்க்கின்றேன்.

ஆகவே யார் நளீம் ஹாஜியாரின் அபிமானிகள் என்றும் அவரின் நேசத்துக்குரியவர் என்றும் கருதுகின்றாரோ அவர்கள் நளீம் ஹாஜியாருடைய கனவாகவும் இலட்சியமாகவும் இருந்த நளீமிய்யாவின் எதிர்காலத்துக்காக ஒத்துழைப்புக்களை வழங்குவது மிகவும் ஏற்புடையதாக இருக்கும் என நான் கருதுகின்ற அதே நேரத்தில் இக்கட்டுரை வாயிலாக நான் சகோதரர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக்கினை நாளீம் ஹாஜியாரிடம் இருந்த விடயங்களோடு ஒப்பிட்டு எழுதியுள்ளமையானது வெறுமனே ஷிப்லி பாரூக்கினை புகழ்வதற்காக மட்டுமே என்று நினைத்தால் அவர்கள் சகோதரர் ஷிப்லி பாரூக்குடன் நட்பினை ஏற்படுத்திய பின் உணர்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. 

அதே போன்று பேறுவளை மண் எவ்வாறு நளீம் ஹாஜியாரை நினைத்து இன்று பெறுமை பட்டுகொள்கின்றதோ அவ்வாறே என்றோ ஒரு நாள் காத்தான்குடி மண்ணும் துடிப்பான இளைஞனும் பொறியியலாளருமான ஷிப்லி பாரூக்கினை நினைத்து பெறுமை பட்டுக்கொள்ளும் என்பதில் என்னிடம் மாற்றுக்கருத்தில்லை அல்ஹம்துலில்லாஹ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -