கிழக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் உறுப்பினர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்த ஏற்பாடு..!

எப்.முபாரக்-
நாடாளுமன்றத்தில் போன்று கிழக்கு மாகாண பேரவைச் செயலகத்திலும் அதன் உறுப்பினர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பேரவைச் செயலாளர் எம்.சீ.எம்.செரீப் முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல், முதன்முதல் 2008ஆம் ஆண்டு நடைபெற்றது. இரண்டாவது தேர்தல் 2012ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த இரு தேர்தல்களிலும் வெற்றி பெற்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களாகத் தெரிவான மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த உறுப்பினர்களின் புகைப்படங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோல முதலாவது மற்றும் இரண்டாவது சபையின் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோரின் புகைப்படங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

இவற்றைவிட ஜனாதிபதி, பிரதமர், கிழக்கு மாகாணசபையில் பணிபுரிந்த ஆளுநர்கள், பிரதம செயலாளர்கள், பேரவைச் செயலாளர்கள் என 131 பேரின் புகைப்படங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

அடுத்த சபை அமர்வின் போது, தவிசாளர் சந்திரதாச கலப்பதி, முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மத் ஆகியோரினால் இவை திரை நீக்கம் செய்யப்படவுள்ளதாக பேரவைச் செயலாளர் எம்.சீ.எம்.செரீப் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -