அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை அன்புவௌிபுரம் பகுதியில் கனணிகள் திருத்துமிடம் உடைக்கப்பட்டு 4 இலட்சம் பெறுமதியான கனணி உபகரணங்கள் களவாடப்பட்டுள்ள நிலையில் அப்பொருட்களை மீட்டுள்ளதுடன் 14 வயது சிறுவனை இன்று (01) கைது செய்துள்ளதாகவும் உப்புவௌி பொலிஸார் தெரிவித்தனர்.
கனணி திருத்துமிம் உடைக்கப்பட்டுள்ளதாக உப்புவௌி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சிறுவனிடமிருந்து 4 மடிக்கணனிகளையும்-இரண்டு டெப் மற்றும் கணணி பாட்ஸ் பொருட்களும் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சிறுவனை திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.முஹீத் முன்னிலையில் ஆஐர்படுத்திய வேளை திருடியதை சிறுவன் ஒப்புகொண்ட படியாலும் 14 வயது என்ற காரணத்தினாலும் இரண்டு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்லுமாறும் உத்தரவிட்டார்.
அத்துடன் எதிர்வரும் ஜூன் மாதம் 06ம் திகதி நீதிமன்றத்திற்கு வருமாறும் உத்தரவிட்டார்.