நடிகை ருக்ஷானா பயணித்த வாகனம் விபத்து..!

பிரபல புதுமுக நடிகையான ருக்ஷானா திசாநாயக்க பயணித்த கார் இன்று தெற்கு அதிவேக பாதையில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெற்கு அதிவேக பாதையில் கெலனிகம நுழைவு பாதையில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பின்னால் வந்த மோட்டார் கார் ஒன்று வேகத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் நடிகையின் காரில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்தினால் பாதையின் பாதுகாப்பு வேலிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பாதுகாப்பு வேலிக்கு ஏற்பட்ட சேதத்துக்கான நஷ்ட ஈட்டை செலுத்துமாறு நடிகைக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -