வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் தமது கட்சி தெளிவாக உள்ளது - உலமா கட்சி

எப்.முபாரக்-
டக்கும் கிழக்கும் இணைப்பு விடயத்தில் தெளிவான தமது நிலைப்பாட்டை தமிழ் கட்சிகள் பகிரங்கமாக சொல்லும் வரும் வரை தமிழ் கட்சிகளுடன் முஸ்லிம் கட்சிகள் இணைந்து செயற்படுவது முஸ்லிம் சமூகத்துக்கு செய்யும் துரோகமாகவே பார்க்கப்படும் என உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.

அண்மையில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தமிழ் கட்சிகள் இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதை ஆரம்பித்து அதில் முஸ்லிம் கட்சிகளும் இணைந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை சம்பந்தமாக கேட்ட போதே உலமா கட்சித்தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் டக்ளஸ் தேவானந்தா, ஆனந்த சங்கரி போன்ற முஸ்லிம் சமூகத்தின் மீது இரத்தக்கறை படியாதவர்கள் இருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ் ஆயுத இயக்கங்களில் ஈ பி டி பி மட்டுமே தமிழ் பேரினவாதமின்றி செயற்பட்டதை நாம் அறிவோம். 

அதே வேளை முஸ்லிம் சமூகத்துக்கும் தமிழர்களுக்குமிடையில் தற்போதுள்ள பிரதான முறுகல் என்பது வடக்கு கிழக்கு இணைப்பு சம்பந்தமானதாகும். இது பற்றிய அக்கூட்டமைப்பின் பகிரங்க அறிக்கை வெளிவராமல் முஸ்லிம் கட்சிகளை இணைந்து கொள்ளும்படி அழைப்பது சரியான புரிந்துணர்வுள்ளதாக தெரியவில்லை.

எம்மை பொறுத்தவரை வடக்கு கிழக்கு இணைப்பே தமது இலக்கு என பகிரங்கமாக கூறும் திரு. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து செயற்படுவதை முஸ்லிம் சமூக துரோகமாகவே பார்க்கிறோம். 

த. தே கூட்டமைப்பின் அண்மைக்கால முஸ்லிம்கள் மீதான பற்று என்பது வெள்ளாட்டின் மீதான ஓநாயின் அனுதாபம் போன்றும் அகத்திக்கீரைக்கு ஆசைப்பட்டு கழுத்தை கொடுக்க தயாராகவுள்ள ஆட்டின் நிலைபோன்றே முஸ்லிம் காங்கிரசும் முஸ்லிம் சமூகத்தை ஆபத்தை நோக்கி தள்ளி விட்டுள்ளது என்றே கூறுகிறோம். 

இன்று த. தே கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்துள்ளதானது தனிப்பட்ட பதவிகளுக்கும் பணத்துக்காகவும் வடக்கு கிழக்கை இணைப்பதற்கான தமிழ் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றவுமே என்பதை அரசியல் அறிவுள்ள எவரும் மறுக்க முடியாது.

ஆகவே புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் கட்சிகளை அழைத்து வடக்கு கிழக்கு இணைப்பு சம்பந்தமாக தமது பகிரங்க நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். அதன் பின் முஸ்லிம் கட்சிகளை இணைவது பற்றி முஸ்லிம் கட்சிகள் தீர்மானம் எடுப்பதே முறையானது என முபாறக் மௌலவி மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -