றுஹைம் றூமி-
அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் ஆறு மாதகால முழுநேர 'கணிய அளவீட்டு உதவியாளர்' கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு விடுகை விழாவில் நினைவுச்சின்னங்கள் வழங்கிப் பாராட்டப்பட்டது.
விரிவுரையாளர் ஏ.ஆர்.றுகைம் றூமியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 'கிழக்கு மாகாண சபை உறுப்பினர்' கே.ஏம்.ஏ. றஸ்ஸாக் அவர்களும், விசேட அதிதிகளாக ஊடகவியளாலர் 'கவியரசி' ஜுல்பிகா சரீப், உயிரியல் விஞ்ஞான ஆசிரியர் 'தொழிலதிபர்' ரிஸாட் சரீப் மற்றும் கல்லூரி விரிவுரையாளரும் கலந்து சிறப்பித்தனர்.