அமைச்சர் ராஜித சேனாரட்னவை சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய சுகாதார அமைச்சரை பணி நீக்கி, செயற்திறனான ஒருவரை அமைச்சுப் பதவிக்கு நியமிக்குமாறு சங்கத்தின் ஊடக் பேச்சாளர் டொக்டர் நவிந்த சொய்சா கோரியுள்ளார்.
வைத்தியர்களுக்கான நியமனங்கள் தொடர்பில் தலையீடு செய்ய வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு உரிமையுண்டு.
நாட்டின் தேவைகளுக்கமைய நியமனங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். வேறு காரணிகளை நம் முன்னிலைப்படுத்தவில்லை.
அமைச்சர் அரசியலில் நெருக்கமானவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்களின் பங்களிப்புடன் தீர்மானங்களை எடுக்கின்றார்.
சுகாதார அமைச்சில் அரசியல் தலையீடு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. எனவே சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து ராஜித சேனாரட்ன நீக்கப்பட்டு பொருத்தமான ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமென சொய்சா மேலும் தெரிவித்துள்ளார்.
