கண்டி மாவட்டத்தில் மேலும் நான்கு தையல் பயிற்சி நிலையங்கள் அமைப்பதற்கு அமைச்சர் றிசாத் முடிவு...!

ண்டி மாவட்டத்தில் மேலும் நான்கு தையல் பயிற்சி நிலையங்களை அமைத்துத் தருவதற்கு அமைச்சர் றிசாத் முன் வந்துள்ளதாக மடவளை வை.எம்.எம்.ஏ. தலைவர் ஏ.எம்.சலாஹுதீன் தெரிவித்தார். 

அக்குரணை, கெலியோயா, கண்டி, கம்பளை ஆகிய இடங்களில் இந்த தையல் பயிற்சி நிலையங்களை அமைத்துத் தருவதாக அமைச்சர் தெரிவித்ததாக வை.எம்.எம்.ஏ. தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

மடவளை மதீனா கல்லூரி அஷ்ரப் கேட்போர் கூடத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விழாவில் கலந்துகொண்ட அமைச்சர், மடவளைக்கு தையல் பயிர்ச்சி நிலையம் ஒன்றை அமைத்துத் தருவதாக வழங்கிய வாக்குறுதியை நேற்று நிறைவேற்றினார். 

இதற்கிணங்க ஏற்கனவே தையல் பயிற்சி வழங்கப்பட்ட 20 யுவதிகளுக்கு அமைச்சர் றிசாத், நேற்று தையல் இயந்திரங்களை வழங்கி வைத்தார். அத்துடன் மடவளையில் இன்னும் 20 பேருக்கு தையல் பயிற்சியை வழங்கி, தையல் இயந்திரங்களையும் கையளிப்பதாக தெரிவித்திருக்கிறார். வெகுவிரைவில் கண்டி மாவட்டத்தில் மேலும் நான்கு இடங்களில் இந்த தையல் பயிற்சியை வழங்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் அறிவித்தார்.

இந்த நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், கூட்டுறவு அபிவிருத்தி தேசிய நிர்வாகப் பணிப்பாளர் றிஸ்மி, லக்சல நிறைவேற்றுப் பணிப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -