எம்.ரி.எம்.யூனுஸ்-
காத்தான்குடி ஸாவியா வித்தியாலய வகுப்பறை கட்டிடத்திற்கான ஆரம்ப நிகழ்வு வித்தியாலய அதிபர் இஸ்ஸதுல் நயீமா அப்துல் ஸலாம் தலைமையில் இன்று 30.06.2016 திங்கட்கிழமை இடம்பெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் 35 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வகுப்பறை கட்டடத்திற்கான ஆரம்ப நிகழ்வு வித்தியாலயத்தில் நடை பெற்றது.
அத்தோடு காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் 70 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 3 மாடி கட்டடத்திற்கான ஆரம்ப நிகழ்வு வித்தியாலய அதிபர் எஸ்.எல்.ஏ.கபூர் தலைமையில் இடம்பெற்றது.
அதிதிகளாக முதலமைச்சர் நஸீர் ஹாபிஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.முபீன், வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி, நகரசபை செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் அவர்களுடன் பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்திற்கு 55 இலட்சம் ரூபா செலவில் இருமாடிகளைக் கொண்ட வகுப்பறைக் கட்டிடத்திற்கான ஆரம்ப நிகழ்வு தடைப்பட்டமை என்பதும் குறிப்பிடத்தக்கது.



