இன்று நிந்தவூரில் இடம்பெற்ற கோர விபத்து - வீடியோ





சுலைமான் றாபி,எஸ்.என்.றிஸ்லி,ஜெலீல்-
நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதான வீதியில் இன்று 18ம் திகதி காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதுடன், மோதுண்ட வாகனங்கள் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளன.

இவ் விபத்துச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது..

அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த (LM-0895 ம் இலக்க) தினசரிப்பத்திரிகை ஏற்றிச் செல்லும் வாகனமும், கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்துக்கொண்டிருந்த (MB-8521 ம் இலக்க) பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதுண்டதனாலேயே மேற்படி விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

இவ் விபத்தில் பத்திரிகை ஏற்றிச் சென்ற வாகன சாரதியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சாரதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாகவும், பஸ் பண்டியில் பயணித்து சிறு காயங்களுக்குள்ளான சில பேர் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இவ்விபத்தில் சிக்கிய இரு வாகனங்கள் கோர விபத்தொன்றில் சிக்கிய நிலையில் காணப்படுகின்ற வேளை இவ் வாகனங்கள் பலத்த சேதங்களுக்கும் உள்ளாகியுள்ளது.

இதேவேளை இவ்விபத்து சம்பவத்தில் வாகன சாரதிகளின் கவனயீனத்தினாலேயே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு இந்த விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சும்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வாகன விபத்து இடம்பெற்றுள்ள நிந்தவூர் பெரியபால பிரதேசமானது அதிக வாகன விபத்துக்கள் நடைபெறும் பிரதேசமாகவும், இவ்வீதியில் காணப்படும் பாலத்தினூடாக அதிகவேகத்துடன் பயணம் செய்வதனாலேயே அடிக்கடி இவ்வாரான விபத்து சம்பவங்கள் நேர்ந்துள்ளது. மேலும் இதே இடத்தில் கடந்த வருடம் இவ்வாறான விபத்து இடம்பெற்றதோடு அதில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பத்திரிகை ஏற்றிச் செல்லும் வண்டியும் , கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இவ் விபத்தில் பத்திரிகை ஏற்றிச் சென்ற வாகனத்தின் சாரதியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பஸ் பண்டியில் பயணித்த பலருக்கும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவ் விபத்தில் சிக்கிய இரு வாகனங்களுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -