தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினத்தை தலவாக்கலையில் நடாத்துவதற்கு தீர்மானம்..!

க.கிஷாந்தன்-
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் மேதின நிகழ்வினை தமிழ் முற்போக்கு கூட்டணியாக இம்முறை தலவாக்கலையில் கொண்டாடுவதற்கு மலையக மக்கள் முன்னனி தீர்பானித்துள்ளது.

இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக விஷேட கூட்டம் 09.04.2016 அன்று தலவாக்கலையில் நடைபெற்றது. இதில் மலையக மக்கள் முண்ணனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே. இராதாகிருஸ்ணன், மலையக மக்கள் முன்னனியின் செயலாளர் நாயகமான ஏ.லோரன்ஸ், நிதிச்செயலாளர், அரவிந்தகுமார் உட்பட கட்சியின் உயர் நிர்வாகத்தினர், அங்கத்தினர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே. இராதாகிருஸ்ணன். 09.04.2016 அன்று எமது கட்சி கூட்டத்தின் போது தமிழ் முற்போக்கு கூட்டனியின் ஏனைய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி தலவாக்கலையில் கொண்டாட ஏக மனதாக திர்மானிக்கபட்டது. இதன் படி ஏனைய தலைவர்களுடன் பேசி சரியான தீர்மானம் எடுக்கபட்டு மே தினத்தை தலவாக்கலையில் கொண்டாடப்படும் என்று கூறினார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -