அரசியல் கணக்கு...!

அரசியல் கணக்கு
++++++++++++++++

இருக்கின்ற தொழில்களிலே
ஈசியா உழைப்பதற்கு
அரசியல் போன்றதொரு
அரிய தொழில் வேறில்லை

கட்சி மேலிடத்தால்
கணிசமான தொகையொன்று
தேர்தல் செலவு எனும்
பேரில் பெறுவதிலே
செலவு போக மிச்சம்
சேரும் பெருந்தொகை.

பதவி கண்ட பின்னாலே
பல்வேறு வழிகளாலே
காசு மழை பொழியும்
கஜானா ஊற்றெடுக்கும்

பெரிய ஸ்கூலிலே
பிள்ளையை சேர்ப்பதற்கு
உரிய தகுதியின்றி
உடனே ஜொப் எடுக்க
சரியான முறையிலன்றி
சட்டென்று ட்ரான்ஸ்பர் ஆக
முறையான லைசன் இன்றி
முதிரை மரம் கடத்தலுக்கு
சப்போர்ட் ஒன்று கொடுத்தால்
சாக்கில் பணம் நிறையும்

கொந்தராத்துக் கொமிசன்
தந்திரமாய் கிடைக்கும்
வெளி நாடு போய் வரக்க
வேண்டியதைக் கொண்டு வர
உண்ணாட்டு பொஸ்மாரின்
ஒரு கணக்கும் கிடைக்கும்.

கட்சி மாறிச் செல்ல
கச்சிதமாய் பணம் கொட்டும்
உட்ச உழைப்புத் தொகை
உதுலதான் உள்ளதப்பா.

பேமிட்டால் கிடைப்பதுவே
பெரிய கணக்கு வரும்
நாமிட்ட வாக்குகளால்
நடக்கிறது எல்லாமே.

அரசாங்க சம்பளம்
அப்புறம் அலவன்ஸ்கள்
பெருந்தொகைக் காசு
பிக்ஸ்ட்டாக வரும் வேறாய்.

எல்லோரும் கள்ளரல்ல
யாரையும் குத்தவில்லை
உலகமெங்கும் நடக்கின்ற
உண்மையை உரத்துச் சொன்னேன்.

Mohamed Nizous
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -