பா.திருஞானம்-
நுவரெலியா குதிரைப் பந்தய திடலில் ரோயல் டர்ப் கழகத்தினால் (ROYAL TURF CLUB)) குதிரை பந்தய ஓட்ட நிகழ்வுகளின் போது நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி ஈட்டியவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய, இலங்கைக்கான பிரித்தானிய உதவி தூதுவர் லோரா டேவிஸ் (Laura Davies), பிஸேஸில் நாட்டுக்கான தூதுவர் எலிசெபத் சொபி பல்சா ((Elisabeth Sophie Balsa), அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, ஜோன் அமரதுங்க, நுவரெலியா மாநகர சபை மேயர் மகிந்த தொடம்பெ கமகே கழகத்தின் உயர் மட்ட அதிகாரிகள், அங்கத்தினர் கலந்து கொண்டு வெற்றி ஈட்டியவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.
இதன் போது குதிரை பந்தய ஓட்டம் 2,4,5,7களில் வெற்றி ஈட்டியவர்களுக்கான பரிசில்கள் கேடயங்கள், சிறந்த தோற்றத்திற்குரிய ஜோடிகளான மலிக், கிமாலி பெர்னான்டோக்கான பரிசில்கள் கேடயங்கள், சிறந்த ஆடை வடிவமைப்பாளர் (Andrew Maijah) அண்ட்ரூ மஜாவுக்கான பரிசில்கள் கேடயங்கள், சிறந்த ஆடை அணிந்த பெண்ணான பிNஸில் நாட்டுக்கான தூதுவர் எலிசெபத் சொபி பல்சா (Elisabeth Sophie Balsa) அவர்களுக்கான பரிசில்கள் கேடயங்கள், சிறந்த தொப்பி அணிந்த பெண்மணிக்கான விருதுகளும் கேடயங்களும், வழங்கப்பட்டன.






