ஏறாவூர் நிருபர் றிகாஸ்-
இலங்கை இராணுவத்தின் 11 ஆவது பீரங்கிப்படையணி மட்டக்களப்பு-செங்கலடி வர்த்தகர் சங்கத்துடன் இணைந்து சித்திரைப்புத்தாண்டையொட்டி முதல் தடவையாக ஏற்பாடுசெய்த வேடிக்கை வினோத விளையாட்டு நிகழ்வுகள் செங்கலடி மத்திய கல்லூரி மைதானத்தில் 17.04.2016 மாலை நடைபெற்றன.
படையணியின் கட்டளையதிகாரி டெப்டினன்ட் கேர்ணல் நதீஷ் பெர்ணாந்துவின் முன்னிலையில் இராணுவம், பொலிஸ் மற்றும் அரசாங்க உயரதிகாரிகள் பலர் இங்கு பிரசன்னமாயிருந்ததுடன் நிகழ்வுகளில் ஆண்கள் பெண்கள் சிறுவர்களும் மிக ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
சாயப்பானை உடைத்தல், தலையணைச்சமர், பெண்களுக்கான தேங்காய் துருவுதல் கிடுகு பின்னுதல் சிறுவர்களுக்கான மிட்டாய் பொறுக்குதல் போன்ற சம்பிரதாய நிகழ்வுகளுடன் மெய்வல்லுனர் மற்றும் குழு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
வெற்றிபெற்றவர்களுக்கு பெறுமதிவாய்ந்த பரிசில்களும் வழங்கப்பட்டன.






