மட்டக்களப்பு பாலத்தடியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு..!

பழுலுல்லாஹ் பர்ஹான்-
ட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு -கோட்டைமுனை பாலத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று 08 வெள்ளிக்கிழமை மீட்க்கப்பட்டுள்ளது.

மேற்படி இளைஞனின் சடலம் மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் கோட்டைமுனை பாலத்தின் கீழ் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

பாலத்தின் கீழுள்ள வாவியினுள் மிதந்தவாறே கண்டெடுக்கப்பட்ட இச் சடலம் சுமார் 27,28 வயது மதிக்கத்தக்கது என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

இச் சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் மீட்க்கப்ட்ட இப் பாலத்தில் கடந்த சில வாரங்களாக திருத்தப் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -